பிக்பாஸ் வீட்டில் லேசாக சண்டை சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. குறிப்பாக அனிதா சம்பத்-சுரேஷ் சக்கரவர்த்தி இடையில் அவ்வப்போது உரசல்கள் நிகழ்ந்து வருகின்றன. நேற்றுவரை அனிதாவுக்கு ஆரம்பமாக இருந்தவர்கள் கூட சுரேஷ் ஒண்ணும் அவ்ளோ மோசமானவரு இல்ல போல, இவங்க தான் சண்டை போட ட்ரை பண்றாங்க என்று அவருக்கு ஆதரவாக பேச ஆரம்பித்து இருக்கின்றனர்.

மேலும் சுரேஷ் சக்கரவர்த்தி யார் என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன் நம்முடைய Behindwoods சேனலுக்கு அவர் அளித்த Exclusive இண்டர்வியூவில் தன்னுடைய குணம் என்ன? பிக்பாஸ் வீட்டில் என்ன செய்ய போகிறேன்? போன்ற கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார்.
அதில் பிக்பாஸ் வீட்டில் அநியாயம் நடந்தால் ஒடுக்குவேன் என்றும் கெட்ட வார்த்தை பேசினால் அவர்களே பீப் சவுண்ட் போட்டு விடுவார்கள் எனவும் தெரிவித்து இருக்கிறார். மிகவும் ஜாலியாக அவர் பேசியிருக்கும் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டேனி-சுரேஷ் சக்கரவர்த்தி இடையிலான ஜாலி-கேலி உரையாடலை கீழே பார்த்து மறக்காம உங்க கருத்து என்னன்னு ஷேர் பண்ணுங்க!