BB JODIGAL 2: "அலுமினியம் பித்தள".. "இத நாங்க பண்ணல.." - அத பண்ணது இவர்தானா? .

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மையில் விஜய் டிவியில் ராஜூ ஜெயமோகன் ஆடிய நடனம் ஒன்று வைரலாகியது.

Advertising
>
Advertising

Also Read | போட்டோஷூட்டில் டான்ஸ் ஆடிய ராஷ்மிகா மந்தனா.. 2 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வரும் பிரபல திரைப்பட பாடலான அரபிக் குத்து பாடலை வேறு மாதிரி வடிவமைத்து வித்தியாசமான முறையில் அந்த நடனம் அமைக்கப்பட்டிருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் வெற்றி பெற்ற நடிகர் ராஜூ, இந்த பாடலில் மையமாக ஆடினார். முக்கியமாக இந்த பாடலில் இரண்டு வரிகள் மிகவும் பிரபலமான வரிகளாக மாறின. ஒன்று ‘அலுமினியம் பித்தளை .. கலாய்ச்சது பத்தல’ என்கிற வரிகள்..இதே போல் இந்த பாடலில், ‘இத நாங்கள் பண்ணல .. நீங்க கேட்டுக்கோங்க சேனல’ என்று அனுப்பல்லவி போன்ற வரியும் மீண்டும் மீண்டும் வரும்.‌

இந்த பாடலை நடனம் அமைத்து, இந்த பாடலுக்கு நடனம் அமைத்த அந்த நபர் யார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அவர் தோன்றி இருக்கிறார். அவர் தான் மணி மாஸ்டர். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடிய ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் இருவருக்கும் கோரியோகிராஃப் செய்ததற்காக மேடைக்கு அழைக்கப்பட்டு அவர் பாராட்டப்பெற்றார்.

அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியில் மணி மாஸ்டர், அலுமினியம் பித்தளை என்கிற ஸ்டெப்பை ராஜூ மற்றும் பிரியங்காவுடன் இணைந்து ஆடியும் காண்பித்தார். இதேபோல், சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோருடனும் இணைந்து ஆடி காண்பித்தார்.

மிகவும் ஜாலியான, துருதுருவென இருக்கும் மணி மாஸ்டர் பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சி கலகலப்பாக சென்றது. பலரும் இந்த இளைஞர்தான் இந்த பாடலை கோரியோகிராஃப் செய்தாரா என்று ஆச்சரியமாக கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

Also Read | ‘கண்ணோடு காண்பதெல்லாம்’.. ரயிலில் வேற லெவலில் பாடிய பெண்.. தேடிவரும் இணையவாசிகள்.!

தொடர்புடைய இணைப்புகள்

Bb jodigal 2 man behind viral aluminum pithala song

People looking for online information on Aluminum pithala song, Bb jodigal 2, Raju, Vijay tv will find this news story useful.