உங்கள புரிஞ்சுக்கவே 'முடியல' சனம்... கடைசில இப்படி பண்ணிட்டீங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்த நிகழ்வு மீண்டும் ஆரம்பித்தது. ஆமாம். வாரம் முழுவதும் முழு ஈடுபாட்டுடன் டாஸ்க் செய்யாத இரண்டு நபர்களை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு இந்த வாரம் அனிதா, ஆரி இருவரும் மாட்டினர். கடந்த வாரம் அமைதியாக இருந்த ஆரி இந்த வாரம் அப்படி இல்லாமல் வச்சு செய்து விட்டார்.

யார் யார் என்னென்ன தவறுகளை செய்கிறார்கள் என அவர் சுட்டிக்காட்ட, ஆனானப்பட்ட பாலாஜியே திணறித்தான் போனார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். கடைசியாக இருவரும் ஜெயிலுக்கு போக அங்கும் இந்த சப்பாத்தி, பொங்கல் சண்டை தொடர்ந்தது. (ரேஷன் பொருட்களை கம்மியாக கொடுத்ததால் வந்த வினை இது)

இந்த நிலையில் சனமின் புத்திசாலித்தனம் கண்டு ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு போய் இருக்கின்றனர். வீட்டுக்கு வெளியில் அனிதாவுடன் கைகோர்த்து முஸ்தபா முஸ்தபா பாடும் சனம் வீட்டுக்கு உள்ளே அவரை நாமினேட் செய்து வச்சு செய்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவங்க டபுள் கேம் ஆடுறாங்கப்பா? ஏன் இப்படி பண்றாங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

BB 4 Tamil: Sanam Shetty nominated Anitha, Netizens shocked

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.