நேரடியாக 'மோதிக்கொண்ட' போட்டியாளர்கள்... எல்லாத்துக்கும் 'அது'தான் காரணமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று முன்தினம் கமல் கொடுத்த டாஸ்க்கின் போது பாலாஜி வெளிப்படையாக ரியோ ஒரு நாலு பேர சம்பாதிச்சு இருக்குறாரு. என்னால முடியல என அவருக்கு புகழாரம் சூட்டி கிரீடம் சூட்டினார். இதன் எதிரொலி தற்போது தெரிய வந்துள்ளது. நேற்று நடைபெற்ற நாமினேஷன் டாஸ்க்கில் பரஸ்பரம் இருவரும் அடுத்தவரது புகைப்படங்களை தீயில் போட்டு நாமினேட் செய்தனர்.

சுரேஷ் கொளுத்திப்போட்ட குரூப்பிஸம் என்கிற வார்த்தை தான் தற்போது பிக்பாஸ் வீட்டை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. ரியோ, அர்ச்சனா, நிஷா, சோம், வேல்முருகன் ஆகியோர் ஒரு கூட்டணியாக இருப்பதாக தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன. வெளிப்படையாக அவர்கள் இல்லை என்று மறுத்தாலும் அவர்களின் நடவடிக்கைகள் அவ்வாறு தான் இருப்பதாக சக போட்டியாளர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இது தற்போது பாலாஜி-ரியோ இடையிலான மோதலுக்கு வழிவகுத்துள்ளது. இருவருமே இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றனர். சமீபகாலமாக பிக்பாஸ் வீட்டில் வலிமையான போட்டியாளராக பாலாஜி உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் மொத்தம் 11 பேர் இருப்பதால் ஓட்டுகள் பிரிந்து, வலிமையான போட்டியாளர் என நாம் நினைப்பவர் கூட வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

BB 4 Tamil: Rio Raj and Balaji nominate each other

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.