கண்ணீருடன் 'கண்ணம்மா'.. சொன்னதும் இன்ப அதிர்ச்சியில் லட்சுமி.. நெகிழ்ச்சி ப்ரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'பாரதி கண்ணம்மா'.

Advertising
>
Advertising

இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களான பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர், கணவன் மனைவியாக இருந்த போதும், பல்வேறு காரணங்களுக்காக பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், இந்த தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் ஒன்றான லட்சுமி, கண்ணம்மாவிடம்  வளர்ந்து வருகிறார்.

முயற்சிகள் அனைத்தும் வீண்

இன்னொரு குழந்தையான ஹேமா, பாரதியிடம் வளர்ந்து வருகிறார். ஆனால், அது தன்னுடைய குழந்தை தான் என்பது தெரியாமல் இருக்கும் பாரதி, ஹேமாவை தத்து குழந்தையாக நினைத்து வளர்த்தி வருகிறார். ஹேமா தங்களின் குழந்தை தான் என பாரதியை புரிய வைக்க கண்ணம்மா முயற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

புதிய திருப்பங்கள்

மனைவி மீது தொடர்ந்து சந்தேகத்திலேயே இருந்து வருகிறார் பாரதி. இதற்கு மத்தியில், பாரதிக்காக கண்ணம்மா கத்திக் குத்து படவே, துடிதுடித்து போகிறார் பாரதி. இதன் பிறகு, வெண்பா மற்றும் பாரதி ஆகியோருக்கு இடையே மோதல்கள் உண்டாக, கண்ணம்மா பற்றி ஹேமாவும் தந்தையிடம் பேச, அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது.

லட்சுமியின் தேடல்

இதனைத் தொடர்ந்து, தாய் தந்தை தான் என்பதை தெரியாமல், பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோருக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியிலும், அவர்களின் குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமி ஆகியோர் இறங்கி இருந்தனர். இந்நிலையில் தன்னுடைய உண்மையான தந்தை யார் என்பதை தெரியாமல் இருக்கும் குழந்தை லட்சுமி, அவரைத் தேடி அலையவும் செய்கிறார்.

தெரிய வந்த உண்மை

அப்போது தான் எதிர்பாராத விதமாக முகவரி ஒன்றின் அடிப்படையில், பாரதி வீட்டிற்கு செல்கிறார் லட்சுமி. அந்த வீட்டிற்குள் சென்ற லட்சுமி, மேலே சென்ற போது, அங்கே அவரின் தாய் கண்ணம்மா, பாரதி உள்ளிட்ட பலர் இருப்பதை பார்க்கிறார்.

அந்த சமயத்தில், பாரதியிடம், "லட்சுமிகிட்ட நீங்க தான் அவ அப்பாங்கிற உண்மைய சொல்ல போறேன்" என கண்ணம்மா கண்ணீருடன் சொல்கிறார். இதனை மறைந்து நின்று கேட்கும் லட்சுமி மனதுக்குள், "டாக்டர் அங்கிள் தான் என் அப்பாவா?" என ஆச்சரியத்தில், ஆனந்த கண்ணீரும் வடிக்கிறார்.

எதிர்பார்ப்பு

இது நாள் வரையில், பாரதி தான் தன்னுடைய தந்தை என்பதை தெரியாமல் இருந்து வந்த லட்சுமிக்கு தற்போது உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. இதனால். ஹேமாவுடன் இணைந்து, தங்களின் ரியல் தாய் தந்தையை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Barathi Kannamma lakshmi hears about the truth from kannamma

People looking for online information on Barathi, Barathi Kannamma, Barathi Kannamma Latest episode, Barathi Kannamma Promo, Hema, Kannamma, Lakshmi will find this news story useful.