வயித்துல இருந்த குழந்தையை கூட திட்டுனாங்க.. உருகிய 'வெண்பா'.. அர்ச்சனா அம்மா சொன்ன 'ஹைலைட்'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

அதே போல, இன்றைய காலத்தில் சீரியல் மூலம் அதிக ட்ரெண்ட் ஆவது யார் என்றால், அதில் நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் தான்.

அந்த வகையில், 'பாரதி கண்ணம்மா' தொடரில் வரும் வெண்பா கதாபாத்திரம் பற்றியும், 'ராஜா ராணி 2' தொடரில் 'அர்ச்சனா' கதாபாத்திரம் பற்றியும் நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

மிரட்டும் வில்லத்தனமான நடிப்பு

பாரதி கண்ணம்மா தொடரில், முதன்மை கதாபாத்திரங்களில் வரும் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் கணவர் மனைவி ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதே போல, இருவரின் குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமி ஆகியோரும் முறையே பாராதி மற்றும் கண்ணம்மா ஆகியோருடன் வாழ்ந்து வருகின்றனர்.

உக்கிரமா இருக்காங்க..

இதுவரை வெளிவராத பல உண்மைகள், அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கும் வேளையிலும், வெண்பா பாரதியை அடைய வேண்டும் என்ற குறிக்கோளில் மிகவும் உக்கிரமாக உள்ளார். அவரது வில்லத்தனமான நடிப்பு, மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஃபரீனா ஆசாத். அதே போல, ராஜா ராணி 2 தொடரில், அர்ச்சனாவாக நடித்து வருபவர் VJ அர்ச்சனா. இவரது வில்லி கதாபாத்திரமும் பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ளது.

என் குழந்தையை கூட திட்டுனாங்க..

இந்நிலையில், 'பாரதி கண்ணம்மா' வில்லி நடிகை ஃபரீனா ஆசாத் மற்றும் 'ராஜா ராணி 2' வில்லி நடிகை VJ அர்ச்சனா இருவரும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பேசப்பட்ட இவர்கள் இருவரையும் குறித்த பின்னணி தற்போது வைரலாகி வருகிறது.

இதில் பேசிய நடிகை ஃபரீனா ஆசாத், தன்னுடைய கதாபாத்திரம் குறித்து பேசிய விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது. "நெகடிவ் ரோல் செய்வதால், நிறைய நெகடிவ் கருத்துக்களும் என்னை நோக்கி வந்துள்ளது. ஆனால், அதை எல்லாம் தாண்டி, நான் கர்ப்பிணியாக இருந்த போது, நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், என்னுடன் சேர்த்து எனது குழந்தையையும் திட்டினார்கள்" என உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

என் மகளுக்கு என்ன ஆகப் போகுதோ?

இன்னொரு பக்கம், VJ அர்ச்சனாவின் தாய் பேசும் போது, "எனது மகளை எத்தனை வீட்டில், எத்தனை பேர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. ஃபரீனாவுக்கு திருமணம் முடிந்து, குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால், எனது மகளுக்கோ இனி தான் எல்லாம் நடக்க வேண்டியுள்ளது" என கூறினார்.

மகளை ஒரு கதாபாத்திரமாக மட்டும் பாருங்கள் என்றும், அதிலிருந்து வெளியே வரும் போது, அவரை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும், ஃபரீனாவின் தாயார் இறுதியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Barathi kannamma Farina and vj archana About anti roles

People looking for online information on Archana, Barathi Kannamma, Farina Azad, Raja Rani 2, Venba, VJ Archana will find this news story useful.