ஜஸ்ட் மிஸ், இல்லன்னா என்ன ஆகியிருக்கும்? லட்சுமியால் தப்பித்த பாரதி.. துடித்த குடும்பத்தினர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாரதி கண்ணம்மா தொடரின் ஒவ்வொரு எபிசோடுகள் மற்றும் ப்ரோமோக்களும், ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது.

Advertising
>
Advertising

"ஜாலியோ ஜிம்கானா".. ஆட்டத்தில் செம Tough கொடுக்கும் Bigg Boss சென்றாயன்.. வீடியோ

இதனிடையே, பாரதிக்கு நடக்க இருந்த விபத்து ஒன்றில் இருந்து அவர் தப்பித்தது பற்றிய பரபரப்பு ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பாரதி தான் தன்னுடைய தந்தை என்பதை தெரிந்து கொண்ட குழந்தை லட்சுமி, தந்தையுடன் அதிக நேரம் இருக்க வேண்டும் என்பதில் தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

பாசிட்டிவ் விஷயங்கள்

பள்ளிக்கு கூட செல்லாமல், மருத்துவமனைக்கு சென்று, பாரதியை சாப்பாடு ஊட்டி விடச் சொன்னது, ஹேமாவிடம் சண்டை போட்டு வந்த லட்சுமி, அவரை தங்கையாக ஏற்றுக் கொண்டது என முற்றிலும் புதிய ஒரு உத்வேகத்தில் லட்சுமி செயல்பட்டு வருகிறார்.

இன்னொரு பக்கம், பாரதிக்கும் கூட சமீப காலமாக, லட்சுமி மீது அதிக அன்பு வர ஆரம்பித்துள்ளது. அடுத்தடுத்து, பாரதி வீட்டில் பாசிட்டிவ் மற்றும் நெகிழ்ச்சியான விஷயங்கள் அரங்கேறி வருவதால், ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

லட்சுமி போட்ட சூப்பர் பிளான்கள்

முன்னதாக, பாரதியை அப்பா என அழைக்க வேண்டி, சூப்பர் பிளான் ஒன்றை போட்டு, அதனை செயல்படுத்தி, பாரதியை தற்போது டாக்டர் அப்பா என அழைத்து வருகிறார் லட்சுமி. அதே போல, பாரதியின் வீட்டில் தூங்குவது போல நடித்து, அப்பா அருகில் இருக்க வேண்டி, லட்சுமி போட்ட அசத்தல் பிளானும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றிருந்தது.

ஒரு நொடியில் தப்பித்த பாரதி

இந்நிலையில், பாரதிக்கு நடக்க இருந்த ஆபத்து ஒன்றை பற்றியும், அதிலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பது பற்றியும், உணர்வுப் பூர்வமான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. பள்ளிக்கூட உடையில் இருக்கும் லட்சுமி, விக்கிக் கொண்டே இருக்க, தண்ணீர் எடுத்து வர வேண்டி, சோஃபாவில் இருந்து எந்திரிக்கிறார் பாரதி. அவர் விலகிய மறுகணமே, மேலே சுற்றிக் கொண்டிருந்த ஃபேன், பாரதி இருந்த சோஃபா மீது விழுகிறது.

மத்தவங்களும் பயந்து போய்ட்டாங்க..

இதனைக் கண்ட பாரதி மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, சத்தம் கேட்டு மற்றவர்களும் அங்கு உடனடியாக வருகின்றனர். அனைவரிடமும், நடந்த சம்பவம் குறித்து பதற்றத்துடன் விளக்குகிறார் பாரதி. இதனால், மற்றவர்களையும் பயம் தொற்றிக் கொள்ள, பாரதி அங்கே இருந்திருந்தால் என்னவாகி இருக்கும் என யோசித்து அஞ்சுகின்றனர்.

முன்னாடியே இது நடந்துருக்கு..

ஆனால், பதற்றத்திலேயே இருக்கும் பாரதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்ததை நினைத்து பார்க்கிறார். அப்போது ஒருமுறை லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டிருக்கும் பாரதி, குழந்தையாக இருந்த லட்சுமியின் அழுகை சத்தம் கேட்டு, சோஃபாவில் இருந்து எழுந்து செல்கிறார். அந்த சமயத்தில், இதே போன்று, பாரதி இருந்த இடத்தில் ஃபேன் விழுந்து கிடக்கும்.

இரண்டு முறையும், லட்சுமியால் தான், ஆபத்தில் இருந்து தப்பித்து பிழைத்துக் கொள்கிறார் பாரதி. இது பற்றி யோசித்துக் கொண்டே இருக்கும் பாரதி, விரைவில் லட்சுமியை தன்னுடைய மகளாக ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை, பார்வையாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

கதிர் - முல்லை விஷயத்தில்.. மூர்த்தி எடுக்கப் போகும் முடிவு.. பரபரப்பில் Pandian Stores குடும்பத்தினர்

தொடர்புடைய இணைப்புகள்

Barathi escapes from accident after he wants to help lakshmi

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Episode, Bharathi Kannamma Serial Promo, Vijay Television will find this news story useful.