"நான்.. சாவையே அடிக்குறவன்"… பிரபல தமிழ் சேனலில் பாலகிருஷ்ணாவின் ’அகண்டா’ ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலகிருஷ்ணா நடிப்பில் வரவேற்பைப் பெற்ற அகண்டா திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

Advertising
>
Advertising

Also Read | CWC புகழ் Lead கேரக்டரில் நடிக்கும் ‘Mr. ZOO KEEPER’… ஷூட்டிங் இங்கயா? செம அப்டேட் !

பாலகிருஷ்ணா…

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான NTR-ன் மகனான பாலகிருஷ்ணா, 100 படங்களுக்கு மேல் நடித்து முன்னணிக் கதாநாயகராக தெலுங்கு சினிமாவில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். இவர் படங்களில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளும், பன்ச் வசனங்களும் தெலுங்கைத் தாண்டியும் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம். இவரின் சில படங்கள் தமிழிலும் டப் ஆகி ரிலீஸ் ஆகியுள்ளன. அதுபோல சில தமிழ்ப் படங்களின் ரீமேக்கிலும் இவர் நடித்துள்ளார்.

அகண்டா…

பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் 'அகண்டா' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 2 ஆம் தேதி வெளியாகியிருந்தது. போயபட்டி சீனு இந்த படத்தை எழுதி இயக்கி இருந்தார். தமன் இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார். பக்கா மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருந்த அகண்டா, ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், மிக பெரிய அளவில் வசூல் வேட்டையும் நடத்தியிருந்தது. இந்த படத்தின் சில காட்சிகள் சமூகவலைதளங்களில் பிரபலமாகின. இதையடுத்து இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகியது.

தமிழில்…

இந்நிலையில் அகண்டா திரைப்படத்தின் தமிழ் தொலைக்காட்சி பிரிமீயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி சேனலான ஜி தமிழ் இந்த படத்தின் தொலைக்காட்சி பிரிமியர் வரும் மே 8 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்போடு “வேட்டையாட அனல் பறக்க... வெறிகொண்டு வந்துகிட்டு இருக்கோம்.” என அறிவித்து மாஸான ஆக்‌ஷன் ப்ரோமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

"நான்.. சாவையே அடிக்குறவன்"… பிரபல தமிழ் சேனலில் பாலகிருஷ்ணாவின் ’அகண்டா’ .. வீடியோ

Balakrishna Akhanda movie television premiere in tamil

People looking for online information on அகண்டா, பாலகிருஷ்ணா, Balakrishna Akhanda Movie, Television premiere will find this news story useful.