நண்பர்களுடன் குதூகலமாக இருக்கும் பாலாஜி... வைரலாகும் பழைய வீடியோ... காரணம் என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிக முக்கியமான போட்டியாளராக மாறியிருக்கிறார் பாலாஜி. இன்று பாலாஜி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இதனையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். பாலாஜிக்கு நெருக்கமான சுசித்ரா கூறும் பொழுது "பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல. உங்கள் அனைத்து இனிமையான கனவுகளும் நிறைவேற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பிறந்த நாளை கொண்டாடுவதை காணமுடிகிறது. இந்நிலையில் பாலாஜிக்கு பிக்பாஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர்களும் பாலாஜிக்கு சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அவரது பிறந்த நாளுக்காக பிக்பாஸ் ஒரு அழகிய கேக்கை உள்ளே அனுப்பி வைக்கிறார். அந்த கேக்கில் "கப் முக்கியம்  குமாரு" என்பது போல் எழுதி இருக்கிறது. அவர் கண் கலங்கி போட்டியாளர்களுடன் பிறந்தநாளை  கொண்டாடுவதை காணமுடிகிறது.

Tags : Balaji

தொடர்புடைய இணைப்புகள்

Balaji with his friedns gang video goes viralநண்பர்களுடன் இருக்கும் பாலாஜி

People looking for online information on Balaji will find this news story useful.