நேற்று மணிக்கூண்டு டாஸ்க்கை எக்கச்சக்கமாக சொதப்பிய பாலாஜியை சக போட்டியாளர்கள் கலந்து ஆலோசித்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர். முதன்முறையாக சுச்சியுடன் இணைந்து பாலாஜி ஜெயிலுக்கு சென்ற அரிய சம்பவம் நடந்தது. கடைசிவரை அடம்பிடித்தும் பாலாஜி செய்த மிஸ்டேக் அவருக்கு எதிராக திரும்பியதில் மனுஷன் நொந்து கொண்டே ஜெயிலுக்கு சென்றார்.
அவர் ஜெயிலுக்கு போனதும் சனம், ஷிவானி ஆகியோர் சென்று அவருக்கு ஆலோசனைகளை வாரி வழங்கினர். போதாதற்கு சுச்சி எதையோ சொல்லப்போக என்ன ஏன் இப்படி சோதிக்கிறீங்க? என்பது போல பாலாஜி பிக்பாஸிடம் புலம்பி தள்ளினார். இதையடுத்து சுச்சி உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டார். (ஜெயிலுக்கு உள்ளே அறை இருக்கிறது போல) பாலாஜி ஜெயிலுக்கு சென்றதை வைத்து ஷிவானியை அனைவரும் கிண்டலடித்தனர்.
ஆனால் சனம் ஒருபடி மேலே சென்று ஜெயிலுக்கு சென்று பாலாஜியையே வச்சு செய்து விட்டார். அவருக்கு ஆறுதல் சொல்வது போல உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் சனமை ஜெயிலுக்கு அனுப்ப போறேன்னு சொல்லிட்டு கடைசில நீயே போய் சிக்கிட்டியே தம்பி என கலாய்த்து வருகின்றனர். சுச்சி ஜெயிலை விட்டு வந்தபோது அவரை ஆடிப்பாடி சனம் வரவேற்று அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.