பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பாலா இல்லை என்றால் இந்த சீசன் இவ்வளவு விறுவிறுப்பாக சென்று இருக்காது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதேபோல் ஆரிக்கு கொடிக்கான ரசிகர்கள் உருவாகி விட்டனர் அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம். இப்படி எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் முதல்முறையாக பாலாஜிக்கும், ஆரிக்கும் இடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல விவாதங்களும், வாக்குவாதங்களும் ஏற்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் கடைசியில் இருவரும் சகோதரராக ஒன்றிணைந்து விட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு பாலா முதல்முறையாக ஆரியைப் பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்த பிறகு ஆரியும் அவரது குழந்தையும் எடுத்த ஒரு அழகிய புகைப்படத்தை அவர் பதிவிட்டுளளார். இந்த புகைப்படத்தின் மூலம் அவர்கள் இருவரது உறவு வெளியே வந்த பிறகும் தொடரும் என்பது தெரிகிறது.