'தப்பு'ன்னு யாருக்குமே தோணல?... மீம்ஸ் போட்டு 'தாளிக்கும்' நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வழக்கம்போல நேற்று யாரெல்லாம் நன்றாக பெர்பார்மென்ஸ் பண்ணினார்கள் என பிக்பாஸ் கொளுத்தி போட்டார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஜெயிலுக்கு போக வேண்டாம் என சொல்லி விட்டார். ஒருவேளை ஜெயில் இருந்து இருந்தால் ஷிவானி, பாலாஜி இருவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஏன் பிக்பாஸ் திடீரென நல்லவராக மாறினார் என்பது தெரியவில்லை. வழக்கம்போல ஒரு டாஸ்க் கொடுத்து அதில் ஆரி வெற்றி பெற்றார்.

அதே நேரம் சம்யுக்தா, பாலாஜி, ஆஜீத், சுச்சி நால்வரும் வீட்டைவிட்டு வெளியில் வந்தனர். மூவரும் ஆரி கேப்டன் ஆனது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர் பேசுனது யாருக்கும் தப்பா தோணலையா? என சம்யுக்தா கேட்க, பதிலுக்கு ஆஜீத் தப்பா தான் தோணுச்சு என்றார். ஆனால் சம்யுக்தா இரவு வெகுநேரம் வரையில் இதுகுறித்து அங்கலாய்த்து கொண்டிருந்தார். சுரேஷ், ரியோ என பலரிடமும் அவர் இதுகுறித்து புலம்பியதை காண முடிந்தது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் எங்களுக்கு தப்பா தோணல. சனம் கிட்ட பாலாஜி அப்படி பேசும்போது நீங்க பாத்துட்டு தானே இருந்தீங்க? என கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் இதை வைத்து மீம்ஸ் போட்டும் அவரை கிண்டலடித்து வருகின்றனர். 

Balaji, Samyuktha and Aajeedh discussed Aari Arjunan

People looking for online information on Samyuktha Karthik will find this news story useful.