BBULTIMATE: "TASK பண்ண மாட்டிங்களா?".. பாலாஜியுடன் சண்டை போட்டாரா அபி.? END-ல தான் ஹைலைட்டே..

முகப்பு > சினிமா செய்திகள்

By |


பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களான அபிராமி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் சண்டை போட்டுக்கொள்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Balaji not cooperating in task with abhirami BBUltimate
Advertising
>
Advertising

சின்னத்திரையில் பிக்பாஸ்:

ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த ஐந்து சீசன் நிகழ்ச்சிகளையும் உலகநாயகன் கமல்ஹாசன் தனது தனித்துவமான பேச்சாற்றலால் தொகுத்து வழங்கினார். இதனால்  கடந்த ஐந்து ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Balaji not cooperating in task with abhirami BBUltimate

பிக்பாஸ் அல்டிமேட்:

இந்த வரவேற்பை அடுத்து இப்போது 24 மணி நேரம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால் இடையில் அவர் நடிக்கும் விக்ரம் படத்தின் வேலைகள் இருப்பதால், தன்னால் தன் கூட நடிக்கும் பிஸியான நடிகர்களான பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நாட்கள் வீணாக்கப்பட கூடாது என்பதற்காகவும் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இப்போது சிம்பு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தமாகி கடந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருக்கு பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள் ஆரவாரமான வரவேற்பைக் கொடுத்தனர்.

கவனத்தை ஈர்த்த புது வீடியோ:

இதையடுத்து இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் வெளியாகியுள்ள ஒரு சிறிய வீடியோ ப்ரோமோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் பிக்பாஸ் போட்டியாளரான பாலாவிடம் சென்று சக போட்டியாளரான அபிராமி ‘என்னங்க டாஸ்க் விளையாட சொன்னா விளையாட மாட்டீங்களா என்கூட… ’ எனக் கேட்கிறார். அதற்கு பாலாஜி ‘ஏன்?’ என ஆர்வமில்லாமல் கேட்கிறார். மேலும் பேசும் அபிராமி ‘நீங்க பண்ணுனதாலதான் அங்க என்னால பர்பார்ம் பண்ண முடியல’ எனப் பேசிக் கொண்டே தன்னுடைய அதிருப்தியை தெரிவிக்கிறார். அதற்குள் அந்த அறைக்குள் மற்றொரு போட்டியாளரான வர இருவரும் விலகிச் செல்கின்றனர்.

கதாபாத்திரமாகவே மாறிய அபிராமி:

பிக்பாஸ் இந்த ப்ரோமோவை பகிர்ந்ததும் ரசிகர்கள் என்னமோ ஏதோ என பேசிக்கொண்டு வருகின்றனர்.  அந்த வீடியோவுக்குக் கீழ் இந்த வீடியோ பற்றிய தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் ’பிக்பாஸ் டாஸ்க்கின் படி பாலாஜியும் அபிராமியும் கணவன் மனைவியாக நடிக்கவேண்டும்.  ஆனால் பாலா அபிராமியை தவிர்த்துக் கொண்டு செல்ல, இப்படி இருந்தால் என்னால் எப்படி மனைவியாக நடிக்க முடியும்’ என்பதையே அபிராமி கேட்டுள்ளார். அப்படி சொல்லிவிட்டு செல்லும் போது கூட ‘அத்த வர்றாங்க’ என சொல்லிவிட்டு செல்கின்றார். அப்போது கூட பிக்பாஸ் டாஸ்க்கில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தோடு ஒன்றி செயல்பட்டு வருகிறார். அது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Balaji not cooperating in task with abhirami BBUltimate

People looking for online information on Abirami, Balaji, BiggBoss Ultimate, Kamal, Simbu will find this news story useful.