தன்னுடைய பிரேக்கப் குறித்து பாலாஜி நேற்று பிக்பாஸ் வீட்டில் பேசினார். இதுகுறித்து அவர், ''எல்லாருமே நம்மள கெட்டவனா நெனைச்சுர போறாங்கன்னு நெனைச்சா. கோபத்துல சில வார்த்தைங்க விட்டுட்டேன். நான் நிஜ லைப்லயும் அவ்ளோ டென்ஷன் ஆவேன். எடுத்து எறிஞ்சி பேசுவேன்னு நெனைச்சுருவாங்க பயந்துட்டேன். சீரியஸா நான் ஒரு அஞ்சு வருஷமா. கடைசியா நான் பிரேக்கப் ஆனப்போ. depression la கோபம் பட்டேன். அதுக்கு அப்புறம் நான் கோபப்பட்டதே இல்லை. எல்லாத்துக்கும் ஒதுங்கி போயிருவேன். பொறுமையா போயிருவேன்.
நான் உழைச்ச உழைப்புக்கு அங்கீகாரத்துக்கு பதிலா சோம்பேறின்னு ஒரு பட்டம் கெடைச்சுது. கண்டிப்பா அதுக்கு கோபம் வரும். கல்ச்சர்னு ஒண்ணு இருக்கு நம்ம ஊர்ல அதை நான் மதிக்காதவன் சொல்லும்போது அதிகமா கோபம் வரும். என்னைக்குமே வாய்ல சொல்ல மாட்டேன். செயல்ல இன்னொருத்தவங்கள தூக்கிவிட்டு விளையாடித்தான் எனக்கு லைப்ல பழக்கம். எனக்கே ஒரு சந்தேகம் வந்துருச்சு. நான் கெட்டவன் ஆகிட்டோனோன்னு. என்னை புடிச்சு ஓட்டு போட்டவங்களுக்கு அந்த சந்தேகம் வந்துருமோ பயந்துட்டேன்.
அதெல்லாம் இல்லன்னு நீங்க ஓட்டு போட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. சரி நீங்க தப்பா எடுத்துக்கல. தப்பா புரிஞ்சுக்கலன்னு. அதுக்கு எல்லாம் நான் எப்படி நன்றி சொல்ல போறேன்னு தெரில. புதுசா பொறந்த மாதிரி இருந்தது. ஏன்னா எனக்குள்ள அவ்ளோ சந்தேகம். என்னைக்குமே நான் சேவ் ஆகும்போது அவ்ளோ சந்தோஷப்பட்டது இல்லை. எல்லாருக்குமே நம்மள புடிக்கும்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு. எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி,'' என்றார்.