நேற்று பிக்பாஸ் வீடு நீண்ட நாட்களுக்கு பின் சற்று அமைதியாக இருந்தது. (கொளுத்தி போடும் மூடில் பிக்பாஸ் இல்லை போல) டாஸ்க்குகளும் பட்டிமன்றம், மியூஸிக்கல் சேர் என்று சற்று சாப்டாகாவே சென்றது. மியூஸிக்கல் சேர் போட்டியில் வேல்முருகன் கண்ணை கட்டிக்கொண்டு பாட, மற்றவர்கள் ஆனந்தமாக விளையாடினர்.
யார் கையில் அந்த பாக்ஸ் வரும்போது பாட்டு நிற்கிறதோ அவர் எழுந்து யாராவது ஒருவரை அழைத்து ஏதாவது செய்ய சொல்ல வேண்டும் என்பது தான் போட்டியின் விதிமுறையாக இருந்தது. இதில் முதலில் அவுட் ஆனவர் சனம் ஷெட்டி. இதையடுத்து வெளியே வந்த அவர் பாலாஜியை அழைத்து எனக்கும், உனக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது அதனால் என்னை புகழ்ந்து 10 பாயிண்ட் சொல்லு என்றார்.
இதையடுத்து பாலாஜி அலைபாயுதே மாதவன் ஸ்டைலில் சனமின் கையை பிடித்துக்கொண்டு நீ அழகா இருக்கேன்னு நெனைக்கல என அவர் உடை, ஹேர்ஸ்டைல் முதற்கொண்டு பாராட்டிக்கொண்டே வந்தார். கடைசியில் இது நடந்துடுமோன்னு பயமா இருக்கு என சொல்வார் என்று பார்த்தால் 10 பாயிண்ட் முடிஞ்சிருச்சு என கடமை கண்ணாயிரமாக முடித்து கொண்டார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் நினைக்கல, நினைக்கலன்னு எல்லாத்தையும் சொல்லிட்டியே தம்பி என கிண்டலடித்து வருகின்றனர். மேலும் மாடலிங் சண்டையில் ஆரம்பித்து முட்டி,மோதிக்கொண்ட இருவரும் இந்த டாஸ்க்கிற்கு பின் சண்டை போடாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.