நேற்று முன்தினம் ஆரி-பாலாஜிக்கு இடையில் சமரசம் செய்து வைக்க சனம் முயன்றது கடைசியில் அவருக்கே எதிராய் முடிந்தது. பாலாஜி பேசும்போது கையை சுண்டி பேசியதாக ஆரி சொல்ல நான் அப்படி பேசவே இல்லை என பாலாஜி மறுத்தார். கேப்ரியலா கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல திணறிய பாலாஜி யாரெல்லாம் வர்றீங்க? என சொடக்கு போட்டு கேட்டார்.

ஆனால் நேற்று பேசும்போது நான் அந்த டோனில் பேசவில்லை. கையை நீங்க சொல்ற மாதிரி எல்லாம் பண்ணல என்று முழுமையாக அந்த குற்றச்சாட்டை மறுத்தார். மீண்டும், மீண்டும் பேசியும் கூட இவர்கள் இருவர் பஞ்சாயத்தும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் பாலாஜி மறுத்ததை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஒரு குறும்படம் போட்டு தாளித்து வருகின்றனர்.
சமீபகாலமாக ஆரி-பாலாஜி இடையில் மிகப்பெரும் சண்டைகள் உருவாகி வருகிறது. ஆனால் கமல் முன்னிலையில் பாலாஜி பவ்வியமாக அமர்ந்து பெரிய விவாதங்கள் எதுவும் இல்லாதபடி செய்து விடுகிறார். இதனால் இந்த வாரம் அவருக்கு கண்டிப்பாக குறும்படம் போட வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் கோரிக்கையை பிக்பாஸ் ஏற்பாரா?