பிக்பாஸ் வீட்டில் அதிகம் பேசப்படும் வார்த்தையாக குரூப்பிஸம் உள்ளது. சுரேஷ் கொளுத்திப்போட்ட வெடி இடைவிடாமல் புகைந்து கொண்டே இருக்கிறது. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல பாலாஜி தற்போது மிகவும் ஆக்டிவாக சிலபல பஞ்சாயத்துகள், வம்பு சண்டைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இவருக்கும் அர்ச்சனாவுக்கு நடுவில் அடிக்கடி உரசல்கள் நிகழ்கின்றன.
தற்போதைக்கு ரசிகர்களின் கருத்துப்படி அர்ச்சனா, ரியோ, நிஷா ஆகியோர் ஒரு குரூப்பாக இருக்கின்றனர். ஆனால் யாருக்குமே தெரியாமல் ஒரு குரூப் உருவாகி இருப்பதாக ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதாவது சுரேஷ், கேப்ரியலா, பாலாஜி, ஆஜீத் நால்வரும் ஒரு குரூப்பாக இருப்பதாகவும், இது பிக்பாஸ்க்கு மட்டும் தான் தெரியும் எனவும் அந்த மீம் வழியாக தெரிவித்து உள்ளனர். சனம் ஷெட்டி இந்த குரூப்பில் மிங்கிள் ஆக ஆசைப்படுகிறார்.
இதுநாள்வரை அவருக்கும், பாலாஜிக்கு நடுவில் சண்டைகள் இருந்தன. தற்போது அவை தீர்ந்திருப்பதால் அவர் இதில் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை. கேர்ள்ஸ் கூட்டணி என ரம்யா பாண்டியன், ஷிவானி, சம்யுக்தா மூவரும் ஒரு குரூப் ஆக திரிகின்றனர். சோம், ஆரி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் மட்டுமே தற்போது எந்த குரூப்பிலும் இல்லாமல் இருக்கின்றனர். இது இப்படியே தொடருமா? இல்லையா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.