பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதல் வாரம் முடிந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் இருப்பதால் நிகழ்ச்சி தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது. கடந்த வாரம் தாங்கள் கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கை போராட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதில் பாலாஜி முருகதாஸ் சொன்ன கதையை கேட்டு பலரும் உருகி போயினர். அவருக்குள் இப்படி ஒரு சோகமா? என சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி கருத்துக்களை பலரும் பதிவிட்டு வந்தனர். ஆனால் அவரது வீடியோ ஒன்று வெளியாகி அவரை பாராட்டிய நெட்டிசன்களை ஷாக்கடிக்க வைத்துள்ளது. தனது அம்மா-அப்பா குடிப்பழக்கத்தால் தான் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக தெரிவித்த பாலாஜி நீச்சல் குளத்தில் பியரை ஊற்றி குளிக்கும் வீடியோ தான் அது.
இந்த வீடியோவை இப்போது லேட்டஸ்ட் வைரல். எங்கு பார்த்தாலும் இந்த வீடியோவை பகிர்ந்து அப்போ நீங்க சொன்னது எல்லாம் உண்மை தானா? இல்லை உங்கள் மீது மக்களுக்கு உருக்கம் வரவேண்டும் என்பதற்காக அப்படி சொன்னீர்களா? என கேள்விகள் எழுப்பி வருகின்றனர். பாலாஜி பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தாலும் அவரது இன்ஸ்டா அக்கவுண்டை அட்மின் ஹேண்டில் செய்து வருகிறார். தற்போது இன்ஸ்டாவில் இருக்கும் ஏராளமான வீடியோக்கள், புகைப்படங்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.