டெலிகாலர் டாஸ்க்கில் ஆரி அர்ஜுனன், ஷிவானிக்கு போன் செய்து பேசினார். அப்போது உங்களுக்கும், பாலாஜிக்கு இடையில் இருப்பது என்ன மாதிரியான உறவு என ஆரி கேட்க அன்பு கலந்த நட்பு என ஷிவானி விளக்கம் அளித்தார். இதையடுத்து ஆரி அடுத்த வாரம் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டார். தொடர்ந்து டாஸ்க்கை ஒழுங்காக செய்யவில்லை என ஆரி, ரியோ இருவரையும் சக போட்டியாளர்கள் ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சிலம்பம் டாஸ்க் நடைபெற்றது. இதில் ரம்யா, அனிதா கூட்டணி வெற்றி பெற்றது. டாஸ்க் முடிந்ததும் ஆரி, ரியோ இருவரும் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை அர்ச்சனா, ஆரி, நிஷா, சோம், கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ் ஆடிப்பாடி வரவேற்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் விளக்குகள் அணைக்கப்படும் முன் ஷிவானி-பாலாஜி இருவரும் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
பாலாஜி பாடகராக மாறி சரசர சாரக்காத்து வீசும்போது பாடலை பாட ஷிவானி அவரை தள்ளிக்கொண்டு போனார். அப்போது ஷிவானி நெற்றியில் பாலாஜி பட்டென முத்தம் கொடுத்து விட்டார். இந்த காட்சியின் போது ரியோ, ரமேஷ் வெளியில் இருந்தாலும் அவர்களுக்கு பின்னால் இந்த இருவரும் இருந்ததால் அவர்கள் இதை கவனிக்கவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுக்கு பேரு தான் அன்பா? என கிண்டலடித்து வருகின்றனர்.