நேற்று பாலாஜி அணியினர் ரோபோட்டுக்களுக்கு விதவிதமாக டார்ச்சர் கொடுத்தனர். குறிப்பாக ரியோ சிரிக்கும் வகையிலான டாஸ்க்குகளை கொடுத்து போட்டியாளர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்தார். ஒருசிலர் இதில் தங்களது ஹார்ட்டுகளை இழந்தனர். அந்த வகையில் சோம்க்கு டாஸ்க் ஒன்றை ரியோ அளித்தார். 'நுவ்வுண்டே நாக்கு சால இஷ்டம், என சொல்ல சொன்னார்.
இதைப்பார்த்த பாலாஜி ஷிவானி, ரம்யா, கேப்ரியலா மூவரும் இருந்துட்டு போகுது என சொல்லி ஹா ஹா என சிரிக்க வேண்டும் என அதில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றினார். ஒருகட்டத்தில் அருகில் அமர்ந்திருந்த அர்ச்சனாவால் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்தளவுக்கு இவர்கள் செய்தது சிரிப்பை வரவழைத்தது. ரியோ உள்ளிட்டவர்கள் நகர்ந்ததும் என்ன சாவடிக்குறாங்க என சோம் அழுவது போல சொல்ல, மூவரும் சிரித்து வைத்தனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள் பாலாஜி வேற ரகம் பாஸ் எங்களால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல என இந்த வீடியோவை பகிர்ந்து, தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாலாஜியின் இந்த நகைச்சுவை உணர்வு ரோபோவாக மாறியபோது அவருக்கே பூமராங் ஆக மாறி, ஹார்ட்டுகளை எளிதில் இழக்க காரணமாகி விட்டது குறிப்பிடத்தக்கது.