VIDEO: பழைய 'பழக்கம்' திரும்ப வருது... பங்கமாக 'கலாய்த்த' பிக்பாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை எட்டியுள்ளது. தற்போது வீட்டினுள் ஆரி, ஆஜீத், அனிதா, பாலாஜி, ஷிவானி, ரியோ, சோம், கேப்ரியலா மற்றும் ரம்யா ஆகியோர் இருக்கின்றனர். இதில் நாமினேஷன் லிஸ்டில் ஆரி, அனிதா, கேப்ரியலா, ஷிவானி மற்றும் அனிதா இடம்பிடித்து இருக்கின்றனர். இதனால் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த வார லக்சுரி பட்ஜெட்டாக பால் கேட்ச் என்னும் டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் அளித்துள்ளார். இதில் ஆரி அணியில் பாலாஜி, ஆஜீத், ஷிவானி, அனிதா ஆகியோரும், சோம் அணியில் கேப்ரியலா, ரம்யா, ரியோ ஆகியோரும் இடம்பெற்று இருக்கின்றனர். பாலாஜி சிவப்பு பந்துகளை பிடித்து சொதப்பியதால் தற்போது சோம் அணி நிறைய பாயிண்ட்ஸ் எடுத்து முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் Unseen வீடியோ ஒன்றில்  பாலாவை, பிக்பாஸ் கலாய்த்து இருக்கிறார்.

டைனிங் டேபிளில் அமர்ந்து பாலாஜி, ஆஜீத் இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அப்போது பாலாஜி ஜாலியாக எதையோ சொல்லி சிரித்து கொண்டிருக்கிறார். திடீரென பிக்பாஸ் என்ன தம்பி பழைய பழக்கம் எட்டி பாக்குது என பாலாவை பார்த்து கேட்கிறார். அப்போது தான் தன்னுடைய மைக்கை மாட்டவில்லை என்பது பாலாஜிக்கு புரிகிறது. உடனே விழுந்தடித்து பாத்ரூம் ஓடி மைக்கை எடுத்து மாட்ட, அவரைப்பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர்.

இது அண்ணன் போட்ட கோடு தாண்டக்கூடாது!

தொடர்புடைய இணைப்புகள்

Balaji forget to wear his mike, Bigg Boss trolled him

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.