அத்தனையும் 'நடிப்பா' கோபால்?... பாலாஜியை 'கிண்டலடிக்கும்' ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று முன்தினம் நாமினேஷன் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் சொன்ன காரணங்களை பிக்பாஸ் வெளியில் போட்டுக்கொடுத்து விட்டார். குறிப்பாக ஆரி, பாலாஜியை நாமினேட் செய்தபோது காதல் அவன் கண்ணை மறைக்குது என்பது போல சொல்லி இருந்தார். இந்த டயலாக்கை வார்த்தை பிசகாமல் பிக்பாஸ் போட்டுக்கொடுக்க, யாருப்பா அது? என்பது போல பாலாஜி காண்டாகி சுற்றிக்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் மொக்கையான டாஸ்க் ஒன்றை கால அட்டவணை என்ற பெயரில் பிக்பாஸ் அளித்திருந்தார். இதை மேலும் மொக்கையாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் போட்டியாளர்கள் செய்தனர். இதனால் பெரிதாக பஞ்சாயத்துக்கள் எதுவும் இன்று இல்லை. ஆனால் பாத்ரூம் கிளீன் செய்கிறேன் என்ற பேரில் ஷிவானியுடன், பாலாஜி நடனமாடியது ரசிகர்களுக்கு லேசான அதிர்ச்சியை அளித்துள்ளது.

எனக்கு உன்மேல அந்த மாதிரி எதுவும் இல்லை என்று நேற்று சொன்ன பாலாஜி இன்று ஷிவானி லேசாக அப்செட் ஆனவுடன், தனது கொள்கைகளை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு அவருடன் கைகோர்த்து நடனமாடினார். நல்லவேளை அந்த இடத்தில் ஆரி இல்லை. பாலாஜி இப்படி திடீரென செய்ததும் என்னவென்று ஒன்றும் புரியாமல், ஷிவானி விழித்தது குறிப்பிடத்தக்கது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அத்தனையும் நடிப்பா? என்பது போல பாலாஜியின் பெர்பாமன்ஸை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Balaji dance with Shivani in bathroom, Netizens reacts

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.