தலைப்பாகை அணியாமல் வைகுண்டர் பதிக்கு சென்ற உதயநிதி?.. பாலஜனாதிபதி கொடுத்த விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதுடன் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | அய்யா வைகுண்டர் தலைமை பதியில் தரிசனம் செய்த உதயநிதி ஸ்டாலின்.. வைரல் ஃபோட்டோஸ்.!

அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், டான் , காத்து வாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், விக்ரம், சர்தார், லவ் டுடே உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களை தம்முடைய ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

நடிகராக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார்.

அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.  ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள  “கலகத் தலைவன்” படம் உலகமெங்கும் நவம்பர் 18 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.

நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் & சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சுவாமி தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் பஞ்சபதிக்கு சென்று பள்ளியறையில் சாமி தரிசனம் செய்தார்.

உதயநிதி ஸ்டாலினுடன் மேயர் மகேஷ், அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில் அய்யா வைகுண்டர் பதிக்கு செல்லும் பக்தர்கள் தலைப்பாகை மற்றும் திருநாமம் இட்ட பிறகே பள்ளியறைக்கு அனுமதிக்கப்படுவர். உதயநிதி ஸ்டாலினின் வருகையின் போது தலைப்பாகை அணியாமல் திருநாமம் இடாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அய்யா வைகுண்டர் பஞ்சபதியின் தலைமை பூசாரி பாலஜனாதிபதி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில்," அய்யா துணை
இதய அன்பர்களே,
வணக்கம்   வாழ்த்துக்கள். அய்யா வைகுண்டர் காலடி தொழுது எனது மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.  நான் அழைக்கவில்லை. வருவதாக மேயர் தகவல் சொன்னார். நான் மகிழ்ச்சியுடன் வரவேற்றேன். சட்டையிடாமல் தலைப்பாகையுடன் வரவேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் ஏற்றுக் கொண்டேன். ஐந்து நபர்கள் தான் உள்ளே வருவார்கள் என்றார்கள். ஏற்றுக் கொண்டேன்.  நெருக்கடி தள்ளுமுள்ளு வகையற்றநிலையில் நடந்துவிட்டது.  அய்யாவழியினரைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
அய்யா உண்டு." என பதிவிட்டுள்ளார்.

Also Read | அமீர் - பாவனி சந்தித்து இதோட ஒரு‌ வருஷம் .. பார்ட்டிக்கு பின் இருவரும் உருக்கமான பதிவு.!

தொடர்புடைய இணைப்புகள்

Bala janathipathi post about Udhayanidhi Stalin ayya Vaikundar temple visit

People looking for online information on Ayya Vaikundar temple, Bala janathipathi, Udhayanidhi Stalin will find this news story useful.