ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப் நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் 7.03.2021 அன்று நடைபெற்ற பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றனர்.
அதேபோல் இந்த நிகழ்ச்சிக்குப் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்ந்த பல பிரபலங்களும் பங்கெடுத்திருந்தனர். புகழ்பெற்ற விஜய் டிவி காமெடியன் பாலாவுக்கு "MOST PROMISING COMEDIAN ON TELEVISION - MALE" என்ற விருது வழங்கப்பட்டது. அந்த மேடையில் பல கலாய், கவிதை, ரைமிங் ஜோக் என்று மிகவும் கலகலப்பாக இருந்த பாலா Vj நிக்கியுடன் பேசிய செம கலாய் வீடியோ இதோ..!