தம்பி தனுஷ் & அண்ணன் செல்வராகவன் நடித்த படங்கள்.. ஒரே நாளில் ரிலீஸ்.. மாஸ் சம்பவம்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் & நடிகர் செல்வராகவன் நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | Autoimmune Diet-ஆ..?? சமந்தா வெளியிட்ட வெறித்தனமான Workout வீடியோ..!

பகாசூரன்

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G,  ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.

வாத்தி

தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் தான் 'வாத்தி'. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார்

இந்நிலையில் சகோதரர்களான செல்வராகவன் & தனுஷ் நடித்த படங்கள் முறையே பகாசூரன், வாத்தி ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன. இந்த இரு படங்களும் வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று செல்வராகவன் நடித்த பகாசூரன் படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read | "இவங்களுக்கு நம்ம கொடுக்கப்போற தண்டனை".. விஜய்சேதுபதி 'விடுதலை' டப்பிங் GLIMPSE வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Bakasuran Vaathi Sir both Movies Releasing on Same Date

People looking for online information on Bakasuran, Dhanush, Selvaraghavan, Vaathi Sir will find this news story useful.