RRR SOUL ANTHEM: பாகுபலி ராஜமௌலி இயக்கும் RRR படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் எப்போ ரிலீஸ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி, பாகுபலி-2 படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வரவிருக்கும் படம் "RRR".

Bahubali Rajamouli RRR Movie Next Single Song Update
Advertising
>
Advertising

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Bahubali Rajamouli RRR Movie Next Single Song Update

ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார். அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் வெளியீடு, சில காரணங்களால் தள்ளிப்போனது.

இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகிறது. தல அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபாஸின் ராதேஷ்யாம், பவன் கல்யானின் பீம்லா நாயக் படங்களும் பொங்கல் மஹா சங்கராந்திக்கு வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் 3-வது  சிங்கிள் "உயிரே" பாடல் வரும் நவம்பர் 26 ஆம் நாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

Bahubali Rajamouli RRR Movie Next Single Song Update

People looking for online information on Jr ntr, Raja Mouli, Ramcharan, RRR will find this news story useful.