பாகுபலி வில்லன் பல்வாள் தேவன் ராணா நடிக்கும் புதிய PAN INDIA திரைப்படம்! வெளியான OFFICIAL UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பன்மொழிகளில் உருவாகும், பிரமாண்ட   இந்திய திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகர் ராணா டகுபதி  !

Bahubali Actor Rana Daggubati To Star In Pan India Film

நடிகர் ராணா டகுபதி, தசரா பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி, தன் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார். அவரது அடுத்த திரைப்படம் தெலுங்கு & இந்தி மற்றும் தமிழ் என பன்மொழிகளில் பிரமாண்ட இந்திய திரைப்படமாக உருவாகிறது.

Bahubali Actor Rana Daggubati To Star In Pan India Film

இப்படத்தினை Gruham, The House Next Door, அவள் மற்றும் நெற்றிக்கண் படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி, இயக்குகிறார். இத்திரைப்ப்டத்தின் பணிகள் 2022 துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தினை Spirit Media நிறுவனம்  Viswasanti Pictures மற்றும்  Veedansh Creative Works நிறுவனஙகளுடன். இணைந்து வழங்குகிறது. கோபிநாத் அச்சந்தா, அர்ஜூன் தஷ்யன் மற்றும்  ராம்பாபு  சோடிஷெட்டி இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த இனிய செய்தி முதன்முதலில் டிவிட்டரில்  @VISWASANTIPICTS பக்கத்தில் வெளியிடப்பட்டது. பின்னர் இதனை Rana Daggubati தனது பக்கத்தில் டிவிட் செய்தார். Viswasanti Pictures தெலுங்கு திரையுலகில் 30 வருடங்களாக, கொடிகட்டிப்பறக்கும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஜம்பலக்கடி பம்பா மற்றும் அஞ்சலி சிபிஐ போன்ற ப்ளாக்பஸ்டர் ஹிட்களை தந்துள்ளது.

இந்த இனிய அறிவிப்பை அடுத்து, தயாரிப்பாளர் அச்சந்தா கோபிநாத் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அனைத்து தகவல்களும், எங்கள் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கமான @VISWASANTIPICTS வழியாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bahubali Actor Rana Daggubati To Star In Pan India Film

People looking for online information on Bahubali, Gruham, Raana Dagupati, Rana, Rana Daggubati, Spirit Media, The House Next Door, Veedansh Creative Works, Viswasanti Pictures will find this news story useful.