கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான "பகவதி" திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக விஜய் ரசிகர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
Also Read | "தன் பட போஸ்டரை ஒட்டிய ஹீரோயின்.. கேமரா மேனோட எப்படி லவ்னு தெரில".. வாழ்த்திய கஞ்சா கருப்பு...!
இப்படம் வெளியாகி சுமார் 20 வருடங்கள் ஆகிவிட்டது. இப்படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் எழுதி இயக்கினார். நடிகர் விஜய் மற்றும் ரீமா சென் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிகர் ஜெய், வடிவேலு, கே. விஸ்வநாதன், யுகேந்திரன் மற்றும் ஆஷிஷ் வித்யாந்தி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் இப்படத்தில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார்.
நடிகர் விஜய்க்கு ஆக்ஷன், காதல், குடும்ப செண்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக அமைந்த இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலையும் பாடியிருப்பார். டீ கடை வைத்திருக்கும் விஜய், கல்லூரி படிக்கும் தன் தம்பி ஜெய்யின் படிப்புக்காகவும் காதலுக்காகவும் போராடுவார். ஆனால் வில்லன்களால் ஜெய் கொல்லப்பட, ஜெய்யின் கர்ப்பிணி காதலியை மீட்டு நடிகர் விஜய் வில்லன்களுடன் மோதுவார். ஜெய்யின் வாரிசை பிறக்க விடாமல் தடுக்கும் வில்லன் ஜெய் காதலித்த பெண்ணின் அப்பாதான். அவரிடம் இருந்து தன் தம்பி காதலித்த பெண்ணை மீட்டு, அப்பெண் வயிற்றில் வளரும் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க போராடும் விஜய், பட முடிவில் வில்லனை கொலை செய்துவிடுவார்.
கடந்த 2002-இல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா உள்ளிட்ட ரஜின்காந்த்தின் தொடர் வெற்றிப்படங்களை அடுத்து நான்காவது முறையாக பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இப்படத்தில் கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதாரமான பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் DI, மிக்ஸிங் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில்தான் இரண்டு திரைப்படங்களும் ஒரேநேரத்தில் படப்பிடிப்பு நடந்ததாகவும், அந்த சமயத்தில் பாபா கெட்டப்பில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, பகவதி கெட்டப்பில் இருந்த நடிகர் விஜய் சந்தித்தது தொடர்பான Throwback புகைப்படங்களும் இணையதளத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
Also Read | Love Today : “இவரை மறந்துட்டேன்..” விஜய் பட இயக்குநருக்கு நன்றி சொல்லி ட்வீட் போட்ட பிரதீப்.!