இசையமைப்பாளர் மற்றும் நடிகர் GV பிரகாஷ் நடித்து இசையமைத்துள்ள பேச்சுலர் திரைப்படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நேரடியாக திரையரங்கில் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தில், GV பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பவர்தான் நடிகை திவ்ய பாரதி. மேலும் இப்படத்தில் முனீஸ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் இவர்களுடன் இணைந்து நடித்துள்ளனர்.அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கு இசையமைக்க, சித்துக்குமார் பின்னணி இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஐடி நிறுவனத்தின் நடக்கும் அனைத்து வித உணர்வுகளும் கலந்த அழுத்தமான காதல் கதையான பேச்சுலர் திரைப்படத்தை ஜி.டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது உணர்ச்சியவயப்பட்டு கண்ணீர் சிந்திவிட்டார்.
முன்னதாக பேசிய நாயகி திவ்ய பாரதி, “இந்த மழையை பொருட்படுத்தாமல் விழாவுக்கு வருகை தந்திருக்கும் அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கு மிகவும் நன்றி. 2 வருடங்களாக நாங்கள் இந்த ஒரு வெற்றிக்காக தான் கஷ்டப்பட்டோம். இதில் பணியாற்றிய அனைவருமே படத்தின் தூண்களாக அமைந்திருக்கின்றனர். ஒரு முதல் படமாக எனக்கு தெரியாத நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தனர்.
தயாரிப்பாளர் டில்லிபாபு அவர்கள் நினைத்திருந்தால், பிரபலமாக இருக்கிற நாயகியை தேர்ந்தெடுக்கலாம். எனினும் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருந்தார்கள். அதற்கு என்னுடைய நன்றி. இத்திரைப்படத்தில் கமிட் ஆனதில் இருந்தே நான் ரெகுலராக வொர்க் ஷாப்புக்கு சென்றேன். பட அலுவலகம் சென்று, படத்தைப் பற்றிய பேச்சுகளில் இயக்குநரிடம் ஈடுபட்டேன். சில வசனங்களை சரியாக டெலிவரி பண்ண எனக்கு வராது. அப்போது ஜிவி பிரகாஷ் சார் மிகவும் மோட்டிவேட் செய்வார்” என்று பேசினார்.
பின்னர் மேலும் பேசியவர், “என்னுடைய அம்மா... ஒரு சிங்கிள் பெற்றோராக எவ்வளவு சிரமம் என்பது அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் எப்போதுமே என்னுடன் இருந்தார். எனக்கு மிகவும் நம்பிக்கையாக இருந்தார். எனக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்து...” என்று தமது தாயாரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அழுதுவிட்டார். பிறகு அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுத்ததும், தண்ணீரை குடித்துவிட்டு உரையை முடித்துக்கொண்டார்.