அட.. 'BACHELOR' ஹீரோயின் திவ்ய பாரதியா இவங்க? ஆரம்பத்துல எப்படி இருந்துருக்காங்க பாருங்க..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை 01, பிப்வரி 2022:- பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. அந்த படத்தில் தமது நடிப்பு உடல்மொழி உள்ளிட்டவை மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதன் மூலம் தொடர்ந்து பல படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்தும் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

Advertising
>
Advertising

பேச்சுலர் ஹிரோயின்

G.V. பிரகாஷ் குமார் நடித்த பேச்சுலர் படத்தில் திவ்யபாரதி ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக ரிலீஸ் ஆனது. அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை திவ்ய பாரதிக்கு பல ரசிகர்கள் உண்டாகினர்.

சுப்புவாக திவ்யபாரதி

முன்னதாக இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் நேரலையில் பேசியிருந்த நடிகை திவ்யபாரதி, பேச்சுலர் படத்தின் சுப்பு கதாபாத்திரம் தன் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துவிட்டதாகவும், தனது முதல் படத்திலேயே நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு அமைந்தது அருமையானது என்றும் நெகிழ்ந்தார்.

Also Read: 'இளவரசே.. நா விரல்..'.. தாலி கட்ட சொல்லிக் கொடுத்த மணப்பெண்.. கப்புனு புடிச்சுட்டாரே மாப்ள!

திவ்ய பாரதியின் அடுத்த படங்கள்

இதனைத் தொடர்ந்து நடிகை திவ்யபாரதி அடுத்து 2 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், அதில் ஒன்று பிக்பாஸ் மூலம் பிரபலமான முகேன் ராவ் உடன் அவர் நடிக்கும் ‘மதில் மேல் காதல்’ எனும் திரைப்படம். இதேபோல் திவ்ய பாரதி நடித்துள்ள ‘மதில் மேல் காதல்’ எனும் படத்தை அஞ்சனா அலிகான் எழுதி இயக்குகிறார்.

இதேபோல் மலையாளத்தில் மெகா ஹிட் ஆன ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவும் திவ்யபாரதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கதிர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ட்ரெண்ட் ஆன பிறந்தநாள் கொண்டாட்டம்

இதனிடையே நடிகை திவ்ய பாரதி தனது 30-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்களையும், புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்திருந்ததை அடுத்து அவை ட்ரெண்ட் ஆகின. அந்த பதிவில் "உண்மையான மகிழ்ச்சி, உங்களால் என் சிரிப்பை நிறுத்த முடியாத உணர்வு. எனது பிறந்தநாளை மிகவும் சிறப்பானதாக மாற்றியமைக்கு அனைவருக்கும் நன்றி. நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்!" என்று நடிகை திவ்ய பாரதி குறிப்பிட்டிருந்தார்.

எப்படி இருந்துருக்காங்க பாருங்க.. த்ரோபேக் ஃபோட்டோ

இந்நிலையில் தான் நடிகை திவ்ய பாரதியின் த்ரோபேக் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. தொடக்கத்தில் நடிகை திவ்யபாரதி, எளிமையாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்க்கும்போது அவர் தானா என்று சந்தேகம் வரும் அளவுக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதாக ரசிகர்கள் இந்த ஃபோட்டோ குறித்து கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

Also Read: தள்ளி ஸ்டார்ட் ஆகும்னு பாத்தா.. தானா ஸ்டார்ட் ஆகுதே..  வாக்குவாதத்தில் வனிதா.. ஷாரிக்.. பாலாஜி.. தொடக்கமே பிரமாதம்!

தொடர்புடைய இணைப்புகள்

Bachelor heroine Divya Bharathi viral throwback photo trending

People looking for online information on Bachelor, Divya Bharathi, Divya Bharathi Actress will find this news story useful.