"பேச்சுலர் ஹீரோயின் பீச்-ல".. ஆஹானு சொல்ல வெக்கும் வேற மாரி வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Divya Bharathi: சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்து வெளியான படம் Bachelor.

Bachelor Divya Bharathi new sizzling beach video viral
Advertising
>
Advertising

பேச்சுலர் திவ்ய பாரதி

கடந்த டிசம்பரில் திரையரங்கில் வெளியான இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றர் திவ்யபாரதி. இந்த படம் பின்னர் சோனி லைவ் ஓடிடியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார். 

Bachelor Divya Bharathi new sizzling beach video viral

மதில் மேல் காதல்

இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாக்‌ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா, தீப்ஸ், KPY பாலா, ஆலியா, ஹாட்லீ, வைதேகி, ஸ்ரீநிதி, சிராஜ், ஜெய் சங்கர் செல்வராஜ், வாசு விக்ரம் மற்றும் ராஜி சாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

ட்ரெண்டிங்கில் திவ்ய பாரதி

முன்னதாக நடிகை திவ்ய தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோக்களையும், புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.  இதனை அடுத்து, தான் கர்ப்பமாக இருப்பாதாக சில புகைப்படங்களை பதிவிட்டு அதிரவைத்தார். ஆனால், அந்த புகைப்படங்கள் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி நடித்து வெளியான பேச்சுலர் படத்தில், திவ்ய பாரதி கர்ப்பினியாக நடித்த போது எடுத்த BTS படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுலர் சுப்பு

முன்னதாக பேச்சுலர் படத்தில் தான் நடித்த சுப்பு எனும் கதாபாத்திரம் தனக்கு மனதுக்கு நெருக்கமான பாத்திரம் என்றும் அவர் ஏற்கனவே கூறி இருந்தார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் , வீடியோவை பகிர்ந்திருந்த திவ்ய பாரதி, தற்போது இன்னொரு புதிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

பீச்சில் அலையாடும் வீடியோ..

அதில் பேச்சுலர் ஹீரோயின் திவ்ய பாரதி, பீச்சில், ஒரு குழந்தை போல், அலையாடும் காட்சிகள் அடங்கிய க்யூட்டான வீடியோ இடம் பெற்றுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் சிலருக்கு கவிதைகள் தோன்றுவதையும், அவற்றை கமண்டுகளிலும் காண முடிகிறது. அந்த அளவுக்கு இந்த பீச் வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகை திவ்ய பாரதியின் த்ரோபேக் ஃபோட்டோவும் வைரலாகி வந்திருந்தது.

தவிர, நடிகை திவ்ய பாரதி, மலையாளத்தில் ஹிட் அடித்த 'இஷ்க்' ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில், நடிகர் கதிருடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தெறிக்கவிடும் சந்தானம் நடித்த ஹிட் படத்தின் அடுத்த பார்ட்.. Shoot எப்போ? செம அப்டேட்

 

தொடர்புடைய இணைப்புகள்

Bachelor Divya Bharathi new sizzling beach video viral

People looking for online information on Bachelor, Divya Bharathi will find this news story useful.