சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் "Bachelor" படத்தின் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் படத்தைப் பற்றிய கேள்விகளுக்கு நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
ஆண்களுக்கு பொதுவாக ஆண்மை தான் பெரிய பலம் என்று இந்த உலகம் கட்டமைத்துக் கொண்டிருக்கும்போது, அந்த சமூகத்தில் ஒரு ஆண் தனது ஆண்மையை இழக்க நினைப்பதே அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனையாக நான் நினைக்கிறேன். மேலும் படத்தை விமர்சனம் செய்வது அவரவர் உரிமை. அதிலும் நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும், இந்த படத்தில் இருக்கும் குறைகளையும் கூறுவது நல்லது தான். ஆனால் நல்லது கெட்டது என, ஒன்றும் இல்லை என்று தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்தப் படத்தை ஒரு செக்ஸ் காமெடி படமாக பார்ப்பது தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒன்று, இரண்டு காட்சிகளை வைத்து அப்படி விமர்சனம் செய்வது தவறானது. படத்தின் முதல் 25 நிமிடங்களில், எந்த ஒரு Double meaning வார்த்தைகளோ அல்லது ஒரு பெண்ணை தவறாக பேசுவது, போன்ற காட்சிகளோ இருப்பதில்லை. அதிலும் படத்தில் பல இளைஞர்கள் இருப்பார்கள் அப்படி இருக்கும்போது, இப்போது சமூகத்தில் பெண்களை item, figure எனும் அழைக்கும் காலத்தில், அப்படி ஒரு காட்சியை நான் இந்தப்படத்தில் வைக்கவே இல்லை என கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் தனது Virginity-ஆல் எவ்வளவு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கத்தான் செய்கிறோம். பல திருமணம் ஆன பெண்கள் இந்த ஒரு விஷயத்தில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், இது எல்லாம் ஒரு பிரச்சனை இல்லை என்பதை நாங்கள் இந்தப்படத்தில் கூறியிருக்கிறோம், ஆனால் அதை யாரும் பேசுவதில்லை.
இது எனது நண்பரின் நண்பன் கதை, ஒரு நாள் அவரைப் பார்க்கச்சென்றபோது, அவர் இந்த பிரச்சினையின் உச்சத்தில் இருந்தார். அப்போது இந்த பிரச்சனையைப் பற்றி முழுவதுமாக எங்களிடம் தெரிவிக்கும்போது நான் அதில் முழுவதுமாக இறங்கினேன். ஒரு இரண்டு நாட்கள் கழித்து எனக்கு ஒரு கதையாக தெரிய, இதனை படமாக எடுக்க அவரிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் சரி என்று சொன்னார்.அதனால் உருவாக்கப்பட்டது தான் இந்த படம், எனவும் கூறினார்.
இப்போதைய ஆண்கள் வர்க்கத்தில் நிறைய இளைஞர்கள் இந்த படத்தின் இடைவேளைக்குப் பின் மொத்தமாக ஒரு ஆணுக்கு எதிராக திரும்புகிறார்கள். முனீஸ்காந்த், இந்தப் படத்தில் வசனத்தை அருமையாக சொல்லி இருப்பார். அதை இவர்கள் எல்லாம் கவனிக்கிறார்களா இல்லையா என்பது கூட எனக்கு தெரியவில்லை, என்று தனது கருத்தை கூறினார்.
மேலும் ஒரு நடிகர் இந்தக் கதையை ஏற்று நடிப்பார்களா என கூட தெரியவில்லை ஆனால் ஜிவி பிரகாஷ் குமார் நடித்தார். அதன்பின் இந்தப்படம் ஸ்டைல் இப்படிப் பார்க்கும்போது பிரேமம் மற்றும் அர்ஜுன் ரெட்டி சாயலில் இருப்பதாக நிருபர் கேட்ட கேள்விக்கு, அதை மறுத்து என்னுடைய Inspiration, Seperation படம் தான் எனவும் கூறினார்.