VIDEO: "பாபா பாஸ்கர் சொன்னது இதான்".. இந்த பாட்டுல இவ்ளோ நடந்திருக்கா? சீக்ரெட்டை உடைத்த சயீஷா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் நடனத் திறமையுடன் அறியப்படும் நடிகை சயீஷா.

நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சயீஷா, நடிப்பால் மட்டுமல்லாது தனது நடனத் திறமையாலும் ரசிகர்களை கவர்ந்தவர். பல முன்னணி திரைப்பட ஹீரோக்களுடன் நடித்துவிட்ட சயீஷா, அண்மையில் ஆர்யாவுடன் இணைந்து டெடி படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஆடிய நடனம் ஒன்றின் அனுபவத்தை பற்றி சிலாகித்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சயீஷா பதிவிட்டுள்ளார். எப்போதும் நடன மாஸ்டரின் வழிநடத்தலின் பேரில் அடுத்தடுத்த ஸ்டெப்களை ஆர்டிஸ்டுகள் போடுவார்கள்.

ஆனால் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சண்டைக்காரி பாடலின் ஒரு காட்சியில் தடாகத்தின் நடுவே, ஒரு மிதவைப் பொருள் மீது நின்றபடி சயீஷா, தனது சொந்த நடன ஸ்டெப்களை போட்டு நடனம் ஆடியதாக தெரிவித்துள்ளார். 

மேலும் மாஸ்டர் பாபா பாஸ்கர் மியூசிக்கிற்கு ஏற்றபடி தன்னை ஆடச் சொல்லிவிட்டதாகவும் திட்டமிடப்படாத பல விஷயங்கள் இறுதியில் நல்ல ரிசல்ட்டை கொடுத்துவிடும் என்றும், தன்னுடைய பிடித்தமான கோ-ஸ்டார் கார்த்தியும் இதற்கு ஒரு காரணம் என்றும் அத்துடன் தனக்கு இப்படியான இந்திய திரைப்பட பாடல்கள் பிடிக்கும் என்றும் சயீஷா அந்த இன்ஸ்டா பதிவில்  குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: “பேர மாத்துங்க!”.. “Page-அ விட்டு வெளியேறிடுவேன்!” - கொதித்த Fans.. யுவனின் Cool பதில்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Baba Bhaskar told me Sayyeshaa shares a secret viral video

People looking for online information on Arya, Baba Baskar, Baba Bhaskar, Karthi, Sayyeshaa Saigal will find this news story useful.