விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் பாக்கியலட்சுமி.

இந்த மெகாதொடருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ஆதரவு உள்ளது.
இதில் பாக்கியலட்சுமி எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை கே.எஸ். சுசித்ரா. பாக்கியலட்சுமி மாதிரி ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவியை விவாகரத்து செய்து விட்டார் கோபி. இதனால் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார் பாக்கியலட்சுமி.
பாக்கியலட்சுமி, ராதிகா என இருவரையும் பலே ஆளாக நாடகம் போட்டு கோபி நீண்ட காலம் ஏமாற்றி வந்தார். அந்த நாடகம் முடிவுக்கு வர, வசமாக சிக்கி கொண்டார் கோபி. இதன் பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் அடுத்தடுத்து அரங்கேறி கொண்டிருக்கிறது. கோபிக்கு விவாகரத்து கிடைத்து விட்ட நிலையில், குடும்பத்தை பிரிந்து வந்த அவர், மீண்டும் ராதிகாவை திருமணம் செய்யும் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தனது திருமணத்திற்கு தனது தாய் ஈஸ்வரியை அழைக்க கோயிலுக்கு வரும் கோபி, "நான் சொல்ல போறதை நினைச்சு அதிர்ச்சியாக கூடாது. நான் ராதிகாவை கல்யாணம் பண்ண போறேன்.. தயவுசெய்து என் கல்யாணத்துக்கு வந்து உங்கள் பையனை வாழ்த்துங்க அம்மா" என கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி, "என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? எந்த கன்றாவியை பண்ணாலும் உன் கூட வந்துருவேனா? இந்த கல்யாணத்தை எப்படி நடத்துறனு நான் பாக்றேன்டா" என ஆவேசமாக ஈஸ்வரி கூறுகிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கோபி திகைத்து போய் நிற்பது போல் ப்ரோமோ வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன.