விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் 'ரஞ்சிதமே' பாடலுக்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார். 'வாரிசு' படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே" வெளியாகியுள்ளது.
இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.
இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் தற்போது 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்நிலையில் இந்த பாடலுக்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா & ரித்விகா தமிழ் செல்வி இருவரும் இணைந்து நடனம் ஆடும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. நீல நிற உடையில் சுசித்ராவும் கருபச்சை நிற உடையில் ரித்விகாவும் இந்த ரீல்ஸ் வீடியோவில் தோன்றியுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் பாக்கியலட்சுமி. இந்த மெகாதொடருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் ஆதரவு உள்ளது.இதில் பாக்கியலட்சுமி எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை கே.எஸ். சுசித்ரா. பாக்கியலட்சுமி மாதிரி ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவி பாக்கியலட்சுமியையும், ராதிகாவையும் பலே ஆளாக நாடகம் போட்டு கோபி நீண்ட காலம் ஏமாற்றி வந்தார். பின்னர் மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டார் கோபி. விவாகரத்து செய்ததோடு ராதிகாவை திருமணம் செய்தும் கொண்டார் கோபி.
இதன் பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் அடுத்தடுத்து அரங்கேறி கொண்டிருக்கிறது.
கோபியின் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன்கள், மகள், மருமகள், மாமியார், மாமனாருடன் அதே குடும்பத்தில் வசித்துவருகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.