விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் பாக்கியலட்சுமி.
Also Read | அஜித்துடன் மஞ்சு வாரியர் BIKE RIDE PHOTOS.. ஆச்சரியத்தில் கமெண்ட் செய்த கல்யாணி பிரியதர்ஷன்!
இந்த மெகாதொடருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ஆதரவு உள்ளது.
இதில் பாக்கியலட்சுமி எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை கே.எஸ். சுசித்ரா. பாக்கியலட்சுமி மாதிரி ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவியை விவாகரத்து செய்து விட்டார் கோபி. இதனால் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார் பாக்கியலட்சுமி.
பாக்கியலட்சுமி, ராதிகா என இருவரையும் பலே ஆளாக நாடகம் போட்டு கோபி நீண்ட காலம் ஏமாற்றி வந்தார். அந்த நாடகம் முடிவுக்கு வர, வசமாக சிக்கி கொண்டார் கோபி. இதன் பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் அடுத்தடுத்து அரங்கேறி கொண்டிருக்கிறது. கோபிக்கு விவாகரத்து கிடைத்து விட்ட நிலையில், குடும்பத்தை பிரிந்து வந்த அவர், மீண்டும் ராதிகாவை திருமணம் செய்ய உள்ளார்.
இந்த திருமணத்திற்கான சமையல் காண்ட்ராக்ட்டையும் பாக்கிய லட்சுமி எடுத்துள்ளார். இந்த கல்யாணம் கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையில் நடப்பது என்பதே பாக்கியாவுக்கு தெரியாது. அதே போல் கோபி - ராதிகாவுக்கும் பாக்கியா சமைக்க இருப்பது தெரியாது.
இச்சூழலில் கோபியின் அப்பா ராமமூர்த்தி இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் கோபத்துடன் கல்யாண மண்டபம் வரும் ராம மூர்த்தி, கோபியிடம் கல்யாணத்தை நிறுத்த சண்டையிடுகிறார். ராமமூர்த்தியை திட்டி கோபி தள்ளிவிடுகிறார்.
இதனை கண்ட பாக்கியலட்சுமி, ராமமூர்த்தியை அங்கிருந்து அழைத்து செல்கிறார். "இந்த திருமணத்திற்கு சமைக்காமல் வீட்டுக்கு வா" என ராமமூர்த்தி, பாக்கியாவை அழைக்கிறார். "இது எனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு" என கூறி "வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வருகிறேன்" என கூறுகிறார். இவ்வாறு இந்த வார ப்ரோமோ வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன.
Also Read | வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்.. வில்லனாக அரவிந்த்சாமியா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!