விஜய் டிவியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பே ஆரம்பித்த சீரியல் 'பாக்கியலட்சுமி'. கணவர் மற்றும் 3 வளர்ந்த பிள்ளைகள் உடன் ஒரு குடும்பத்தலைவி எப்படி ஒரு குடும்பத்தைச் சமாளிக்கிறார் என்பது பற்றிய கதைதான் பாக்கியலட்சுமி. எனவே குடும்ப தலைவிகள் பலருக்கும் இது பேவரைட் சீரியலாக மாறிப்போனது. அதுவும் முக்கியமாக குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஒருகட்டத்தில் தனக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லை என்று நினைக்கும் பாக்கியலட்சுமி எப்படி தனக்கான அடையாளத்தை தேடிக் கொள்கிறார் என்பதுதான் கதையின் திருப்பம். இதை பார்த்த பலரும் தங்களுக்கு இந்த சீரியல் ஒரு உந்துதலாக இருப்பதாகவும் பாசிட்டிவிட்டியை உருவாக்குவதாகும் கமெண்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மகளாக நடித்து வருபவர் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நேகா மேனன். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பிரபலமான தொடர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுவும் இல்லாமல் குழந்தை நட்சத்திரமாக நாரதன், ஜாக்சன் துரை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனது குடும்பத்தில் நடந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி பற்றி அவர் தற்பொழுது பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது தனது தாய் கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், தனது தங்கை மருத்துவமனையில் நன்றாக இருக்கிறார் என்றும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் நடிகை நேகா மேனனுக்கு தற்போது 19 வயது ஆகிறது. இந்நிலையில் சிலர் இதைச் விமர்சித்ததையடுத்து அவர்களுக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறும் பொழுது "இந்தச் செய்திக்குக் கிடைக்கும் குப்பை பதில்களுக்கு நான் எதுவும் செய்யப்போவதில்லை. உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.