விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது முக்கியமான சீரியலாக விளங்கி வருகிறது.
இதில் முதன்மை கதாபாத்திரமான பாக்கியலட்சுமிக்கு அவருடைய கணவர் கோபி துரோகம் செய்யும் வகையில் ராதிகா என்கிற இன்னொரு பெண்ணை விரும்பி வந்தார். கணவனை இழந்த ராதிகா, கோபியை முழுமையாக நம்பினார். ஆனால் அந்தப் பெண்ணுக்கும் கோபி துரோகம் செய்துவிட்டார். அதாவது தன் மனைவி தன்னை விவாகரத்து செய்யும் மனநிலையில் இருப்பதாக பொய் சொல்லி ராதிகாவை காதலித்து வந்த கோபி, தற்போது அம்பலமாகிவிட்டார்.
ஆம், பாக்யாவும் ராதிகாவும் நல்ல தோழிகள். இதனால் ராதிகாவே பாக்கியாவுக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிட்டது என்று ராதிகா குற்ற உணர்ச்சியில் இருக்கிறார். இதனிடையே பாக்கியலட்சுமி வீட்டில் இருந்து கோபியுடன் சண்டை போட்டுவிட்டு சுயமாக வாழ்வதாக சொல்லி வெளியேறி விட்டார். இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மகனாக வருபவர்தான் வி.ஜே.விஷால். எழில் என்கிற கதாபாத்திரத்தில் வரும் இவர், பல்வேறு நிலைகளும் பாக்கியாவுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
இந்த நிலையில்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ராஜூ வூட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விஜே விஷால். அவரிடம் பிரியங்கா அவருடைய காதலை பற்றி கேட்கிறார். அதில் சீரியல் விட்டு சீரியல் போய் காதலிக்கிறாயா.? என்று பிரியங்கா ஜாடைமாடையாக கிண்டல் செய்ய, அதற்கு விஷாலோ, “அக்கா.. நான் உங்களிடம் பேசி ஒரு மாசம் ஆச்சு.. அதற்கு இடையில் நடந்ததை எல்லாம் உங்களிடம் சொல்லவில்லை அக்கா” என்கிறார்.
“அப்படியானால் என்ன நடந்தது.? பிரேக் அப் ஆகிடுச்சா?” என்று பிரியங்கா கேட்க அதற்கு ஆமாம் பிரேக்கப் ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார் விஷால். உடனடியாக சாக்லேட் எடுத்துக் கொள்ளவா என்று ராஜூவிடம் ஜாலியாக பேசுகிறார் விஜே விஷால். இதனை அடுத்து, பிரேக் அப் ஆனதற்கு சாக்லேட் எடுத்துக் கொள்பவர் இவர்தான் என்று ராஜூ கூறுகிறார்.