"இது பாக்கியா டீச்சர்'ல.." கண்ணீர் விட்டு கதறிய 'ராதிகா'.. கடைசியில் கோபி ஒண்ணு சொன்னாரு பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் பிரபல தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்து திருப்புமுனை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

Advertising
>
Advertising

மக்கள் மத்தியில் அசுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி.

நெருங்கிய தோழிகளாக பாக்கியா மற்றும் ராதிகா ஆகியோர் இருக்க, பாக்கியாவின் கணவரான கோபி, இருவருக்கும் இடையில் நாடகமாடி வருகிறார். அது மட்டுமில்லாமல், பாக்கியாவை ஏமாற்றி விட்டு, ராதிகாவை திருமணம் செய்யவும் கோபி தயாராகி விட்டார்.

சிக்கப் போகும் கோபி?

இதற்காக, கோபி பார்த்த தில்லாலங்கடி வேலைகள் ஏராளம். பல சமயத்தில், மனைவி பாக்கியா மற்றும் ராதிகாவிடம் சிக்குவதற்கான சூழல் உருவான போதும், தனது சாமர்த்தியத்தால் அதிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொண்டே வருகிறார் கோபி. விரைவில் அவர் சிக்கப் போவது போன்ற காட்சிகள் இருந்தால் கூட, கடைசியில் எப்படியாவது தப்பித்து விடுவார்.

ராதிகா எடுக்கும் முடிவு

இந்நிலையில் தான், சமீபத்தில் வெளியான சில காட்சிகள், கோபியின் வண்டவாளங்கள் அனைத்தும் முடிந்து விட்டதாகவே கருதும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமத்திற்கு பிறகு, ராதிகாவுடனான கோபியின் உறவு பற்றி பலருக்கும் தெரிந்து விடுகிறது. இதனால், அடுத்தடுத்து பல சண்டைகளு அரங்கேறி இருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், கோபியின் குடும்பத்தை பார்த்தே தீர வேண்டும் என முடிவு செய்கிறார் ராதிகா.

இதனைத் தவிர்ப்பதற்காக, பல முறைகளை கோபி பயன்படுத்தி பார்த்தும் அவை கை கொடுக்கவில்லை. இதனால், குடித்து விட்டு ராதிகா வீட்டிற்கு வரும் கோபி, பாக்கியாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து, இவள் தான் என் மனைவி என கூறுகிறார். இது பாக்கியா டீச்சர்'ல என கேட்டபடியே கண்ணீர் விட்டு அதிர்ந்து போகிறார் ராதிகா.

கண்ணீர் விடும் ராதிகா

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அழுது கொண்டே இருக்கும் ராதிகாவிடம், "என் ஃபேமிலி'ய பாக்கணும்ன்னு சொன்னேல்ல. வா கூட்டிட்டு போறேன்" என கூறியபடி, ராதிகாவை அழைக்கிறார். இதனை மறுக்கும் ராதிகா, "எவ்ளோ பெரிய உண்மை'ய என்கிட்ட இருந்து மறைச்சுட்டீங்கல்ல" என கேட்க, இதற்கு பதில் சொல்லும் கோபி, "ஆமா, மறைச்சேன். ஏன் மறைச்சேன். நீ என்ன விட்டு போயிடக் கூடாதுன்னு தான் மறைச்சேன்" என சொல்கிறார்.

இதனைக் கேட்டதும் இன்னும் அதிர்ச்சியுடன் ராதிகா நிற்கும் நிலையில். அடுத்து பாக்கியலட்சுமி கதையில் என்ன திருப்புமுனை ஏற்பட போகிறது என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஒரு சிலர், இது கனவாக கூட இருக்கலாம் என்றும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi radhika shattered after gopi share the truth

People looking for online information on Baakiya, Baakiyalakshmi, Baakiyalakshmi Promo, Gopi, Radhika will find this news story useful.