“வேலை செய்றத தடுக்குறாங்க..” செல்லம்மா சீரியலை விட்டு விலகிய பாக்கியலட்சுமி ஜெனி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு  அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் ஆதரவு உள்ளது. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை திவ்யா கணேஷ்.

Baakiyalakshmi Jeni opted out from Chellamma Megha role
Advertising
>
Advertising

Also Read | VIDEO: ‘பயமுறுத்துற வேலை வெச்சுக்காதீங்க’.. “அசிம்க்கு Attitude..”.. நடிகை தேவிப்ரியா Breaking Interview

பாக்கியலட்சுமி சீரியலின் முதன்மை கேரக்டரான பாக்யாவின் மருமகளாகவும், செழியனின் மனைவியாகவும் வரும் ஜெனி கேரக்டர், குடும்ப பொறுப்புகளையும், தனது மாமியார் பாக்யாவின் கஷ்டங்களையும் உணர்ந்து நடப்பதுடன், இல்லத்தின் மூத்த மனிதர்களிடம் கனிவுடனும் அக்கறையுடனும் நடந்துகொள்ளுமாறு உருவாக்கப்பட்டிருக்கும். முன்னதாக பாக்யாவின் மகளான இனியாவின் பருவவயது மனத்தடுமாற்றங்களை ஜெனி கண்டித்து வழிநடத்தி முற்பட்டதால் இனியாவுக்கும் ஜெனிக்கும் இடையில் உரசல் இருந்தது.

இதேபோல் தாயின் கஷ்டத்தை உணராத செழியனுக்கும், அவனது மனைவி ஜெனிக்கும் ஆகவே ஆகாது என்கிற சூழல் இருந்தது, தற்போது அனைத்தும் சரியாகியுள்ளது. இந்த ஜெனி கேர்கடரில் நடிக்கும் விஜே திவ்யா கணேஷ், விஜய் டிவி செல்லம்மா சீரியலில் மேகா எனும் கேரக்டரிலும் நடித்து வந்தார். நடிகர் அர்ணவ், நாயகன் சித்து எனும் கேரக்டரிலும் மற்றும் அன்ஷிதா, நாயகி செல்லம்மா கேரக்டரிலும் நடித்து வரும் இந்த சீரியலில் மேகா எனும் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார் நடிகை திவ்யா கணேஷ்.

இந்நிலையில்தான் இந்த சீரியலில் இருந்து நடிகை திவ்யா கணேஷ் விலகியுள்ளார். அவருக்கு பதில் இந்த சீரியலில், மேகா கேரகடரில் நடிகை ஸ்ரேயா நடிக்கத் தொடங்கியுள்ளார். சீரியல் நடிகை ஸ்ரேயா தற்போது மேகா கேரக்டரில் நடிக்க கூடிய எபிசோடுகள் டிவியிலும் வரத் தொடங்கிவிட்டன. இந்த சீரியலில் செல்லம்மாவை ஒரு தலையாக காதலிக்கிறார் நாயகன் சித்து. அவருக்கு அவரின் மாமன் மகளாக மேகாவுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனாலும், தான் செல்லம்மாவை திருமணம் செய்து கொள்ள போவதாக உறுதியாக நிற்கிறார் சித்து. இந்த மேகா கேரக்டரில் இருந்துதான் திவ்யா  கணேஷ் விலகியுள்ளார்.

இதனிடையே தான் வெளியேறியதற்கான காரணம் குறித்து பேசியுள்ள திவ்யா கணேஷ், “மேகா கேரக்டரை விரும்பியே ஏற்றேன். இதுவரை சாஃப்ட்டான கேரக்டரில் நடித்த எனக்கு நெகட்டிவ் ரோல் பிடித்தது. ஆனால் அங்கே சிலர் என்னை அந்த வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். எனவே இந்த சீரியலை விட்டு வெளியேற என் சொந்த பிரச்சனை காரணம் இல்லை. அதனால் வெளியேறவே இல்லை. மேகா கேரக்டரை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். ஜெனியும் மேகாவும் வெவ்வேறு வித்தியாசமான கேரக்டர்கள். அந்த வித்தியாசத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு கேரக்டர்களுக்கும் ஆடை தொடங்கி, பல வகையிலும் மெனக்கெட்டேன். எனினும் எப்போதும் என்னை பாக்கியலட்சுமி ஜெனியாக பார்க்கலாம்” என்று உருக்கமாக கூறி இருக்கிறார்.” என தமது வலைதளங்கள் மூலமாக தெரிவித்துள்ளார்.

Also Read | போடு..! விஜய்யின் வாரிசு Intro Song பாடப்போவது இந்த இசையமைப்பாளரா..?

மற்ற செய்திகள்

Baakiyalakshmi Jeni opted out from Chellamma Megha role

People looking for online information on Baakiyalakshmi Jeni, Baakiyalakshmi Seril, Chellamma Serial Update, Divya Ganesh will find this news story useful.