BAAKIYALAKSHMI: "யார்ரா நீ? என் குழந்தை BIRTHDAY-ல?".. பரபரப்பு எண்ட்ரி கொடுத்த ராதிகாவின் மாஜி கணவர்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Television: விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் மனைவி பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்துவிட்டு கோபி, ராதிகாவுடன் உறவில் இருந்து வருவதுடன் தற்போது ராதிகாவை திருமணம் செய்துகொள்ளும் முடிவையும் எடுத்துள்ளார். இந்த உண்மை அறிந்த கோபியின் அப்பாவோ, பக்கவாதம் வந்து பேச முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

Baakiyalakshmi gopi marries radhika ex husband enty
Advertising
>
Advertising

மயூராவின் பிறந்த நாள்..

இந்நிலையில் கோபி, ராதிகாவின் மகள் மயூராவின் பிறந்த நாளையே மறந்து சுற்றிக் கொண்டிருக்க, மயூராவோ கோபிக்கு போன் செய்து அங்கிள், நீங்கள் வந்தால் தான் நான் கேக் கட் பண்ணுவேன் என்று கூறிவிட்டார். அதன் பிறகு தான் கோபி அலறி அடித்துக்கொண்டு ஓடிவருகிறார். வந்தவர் மயூராவை வாழ்த்திவிட்டு, ‘யாருக்குமே உண்மையாக இல்லாமல் இருக்கிறோமே’ என குற்றவுணர்ச்சியில் குறுகுகிறார்.

Baakiyalakshmi gopi marries radhika ex husband enty

திடீர் எண்ட்ரி கொடுத்த ராதிகாவின் முன்னாள் கணவர்..

அப்போதுதான் ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ் திடீரென மயூராவின் பிறந்த நாளுக்காக வருகை தந்து ட்விஸ்ட் கொடுக்கிறார். ஆனால் மனைவியை சந்தேகப்படுவது, குடிப்பது, அடித்து கொடுமை படுத்துவது என இருந்ததால் ராஜேஷிடம் இருந்து ராதிகா விவாகரத்து பெற்றிருந்தார்.

கோபி அங்கிள் பொம்மை வாங்கித் தருவார்..

இந்த ஒரு சூழலில் மயூரா, தன் மகள் என சொந்தம் கொண்டாடியபடி, பொம்மை வாங்கிக்கொண்டு வருகை தந்த ராஜேஷிடம் மயூராவோ தனக்கு கோபி அங்கிள் பொம்மை வாங்கித் தருவார் என குறிப்பிட, என் குழந்தைக்கு எப்படி கோபி பொம்மை வாங்கித் தருவார்? என ராஜேஷ் கோபப்படுகிறார்.

ராதிகாவை கோபி திருமணம் ..

அப்போது ராதிகாவின் அம்மா, “ராதிகாவை கோபி தான் திருமணம் செய்துகொள்ள போகிறார்” என கூறியதும் அவர் அதிர்கிறார்.  மேலும், “இந்த ஆளை கல்யாணம் பண்ணிக்க தான் என்னை அவசர அவசரமாக டைவர்ஸ் பண்ணினியா? குழந்தைக்கு அப்பாவான என்னை போ என வீட்டை விட்டு விரட்டிவிடுகிறீர்கள்? யாரோ ஒருவனை நிற்க வைத்திருக்கிறீர்கள்?” என கேட்கிறார். மேலும் போலீஸை கூப்பிடுவேன் என மிரட்டியதால் ராஜேஷ் கிளம்புகிறார். 

இப்படி ராதிகாவை திருமணம் செய்யும் முடிவை கோபி தீவிரப்படுத்தி வர, பாக்கியலட்சுமியின் மாங்கல்ய பாக்கியம் அவரை காக்குமா என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் விறுவிறுப்பாகவும், புதிய திருப்பங்களுடனும் காண முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also Read: "மாட்டிக்கிட்டியே பங்கு".. பீஸ்ட் மோடு தான் அர்ச்சனாவுக்கு.. ராஜா ராணி 2-ல் தரமான சம்பவம்

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi gopi marries radhika ex husband enty

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial promo, Baakiyalakshmi today, Trending, Vijay Television will find this news story useful.