"கோபி ஓட்டுன ரீலு அந்து போச்சுடோ".. ஃபேமிலி முன்னாடி பல்பு!!.. பத்ரகாளியான ராதிகா!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடர், ஒவ்வொரு எபிசோடிலும் பல பரபரப்பான திருப்பங்களுடன் தான் சென்று கொண்டிருக்கிறது.

baakiyalakshmi gopi insulted before his family radhika angry
Advertising
>
Advertising

இதன் காரணமாக, பாக்கியலட்சுமி தொடருக்கென்று பிரத்யேக ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்ய அனைத்து வழிகளிலும் திட்டம் போட்டு வந்த கோபி, கடைசியில் அதனை நிறைவேற்றவும் செய்து விட்டார். முன்னதாக, மனைவி பாக்கியலட்சுமியையும், ராதிகாவையும் பலே ஆளாக நாடகம் போட்டு நீண்ட காலம் அவர் ஏமாற்றியும் வந்தார்.

இதன் பின்னர், சமீபத்தில் ராதிகாவை திருமணம் செய்து கொண்ட சமயத்தில், பல்வேறு விறுவிறுப்பான நிகழ்வுகளும் கூட பிக்பாஸ் தொடரில் அரங்கேறி இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது பாக்கியலட்சுமி தொடர் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

கோபியின் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன்கள், மகள், மருமகள், மாமியார், மாமனாருடன் அதே குடும்பத்தில் வசித்து வருகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.

தற்போது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் போய்க் கொண்டிருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். மறுபக்கம், தனது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் கொடைக்கானலுக்கு தேனிலவுக்காகவும் வந்துள்ளார் கோபி.

தனது முதல் மனைவி பாக்கியா மற்றும் குடும்பத்தினரை அங்கே காணும் கோபி, வெறுப்பு அடைகிறார். ஆனால், இன்னும் அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்று பாக்கியாவின் வீட்டார் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பல்வேறு வேடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில், அங்கே ஒரு போட்டி நடைபெறுவது போல ப்ரோமோ மூலம் தெரிய வருகிறது. இதில், கோபி மற்றும் ராதிகா ஆகியோர், ஒருவருக்கு ஒருவர் எந்த அளவுக்கு தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதை அறிய விளையாட்டு ஒன்று நடக்கிறது என்பது தெரிகிறது. அதில், கோபி குறித்து ராதிகா 10-க்கு 5 மதிப்பெண்கள் புரிந்து வைத்துள்ளார்.

ஆனால், கோபியோ ராதிகா குறித்து ராதிகா 10-க்கு '0' மதிப்பெண்கள் புரிந்து வைத்துள்ளார். இதனை அறிந்ததும் அங்குள்ளவர்கள் சிரிக்க தொடங்க, விளையாட்டில் வேண்டுமென்ற வம்பு செய்வதாகவும் கோபி குறை கூறுகிறார். ஆனால், ராதிகா குறித்து கோபி அளித்துள்ள பதில் அனைத்தையும் படித்து ஜீரோ மதிப்பெண்கள் எடுத்துள்ளது நிரூபணமும் ஆகிறது.

தன்னை பற்றி கோபிக்கு எதுவும் தெரியவில்லை என ராதிகா கோபத்தில் கிளம்ப, தனது குடும்பத்தினர் மீது கோபியும் அதிருப்தியில் இருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi gopi insulted before his family radhika angry

People looking for online information on Baakiya, Baakiyalakshmi, Gopi, Radhika will find this news story useful.