விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் பாக்கியலட்சுமியின் கணவர் கோபி, ராதிகாவுடன் காதலில் இருந்துவந்த நிலையில், பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொண்டுவிட்டார்.
இதனை தொடர்ந்து பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன்கள், மகள், மருமகள், மாமியார், மாமனாருடன் அதே குடும்பத்தில் வசித்துவருகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாக்யலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் போய்க்கொண்டிருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டிய ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ஒரே ரிசார்ட்டில் தங்கி இருக்கின்றனர். அதே ரிசார்ட்டில்தான் கோபி, ராதிகாவை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்.
அப்போது எதார்த்தமாக கோபியின் மகன் எழில் ஒருமுறை கோபியை பார்த்துவிடுகிறார். இதே போல் அதே ரிசார்ட்டுக்கு டூர் வந்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸூம் கோபியை பார்த்துவிடுகின்றனர். இவர்கள் கோபியை சந்திக்கும் அதே வேளையில் உடன் ராதிகாவையும் பார்த்து விடுகின்றனர். குறிப்பாக கண்ணன் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருக்கு கோபிக்கு ராதிகாவுடன் திருமணம் ஆனதே தெரியாது என்பதால், கண்ணன் கோபியிடம், “என் அக்காவுக்கு துரோகம் செய்கிறீர்களா? இதை நான் சும்மா விட மாட்டேன்” என்று கத்தி விட்டு சென்று மூர்த்தியை அழைத்துவருகிறார்.
இதனால் ராதிகாவோ கோபியிடம் டென்ஷனாகிறார். கோபியோ, “டேய்.. நான் ஹனிமூனுக்கு வந்திருக்கிறேன்டா... இங்கேயும் வந்து ஏன்டா இப்படி எனக்கு டார்ச்சர் கொடுக்குறீங்க.. எனக்கு மிகப்பெரிய ஆப்பு இருக்கு போல இருக்கிறது” என்று கதறுகிறார். இந்த மும்முனை கதை மிகவும் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.
இதில் எப்போது திருப்பம் ஏற்படும் என்று ரசிகர்கள் அவருடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அந்த திருப்பம், கோபி சிக்குவதுதான். ஆனாலும் கோபி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரிடம், “ஆமா, ராதிகா என் பொண்டாட்டி.. நான் தலி கட்டிவிட்டேன்” என வீம்பாகவும் பேசுகிறார். இந்த தொடர் அடுத்தடுத்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.