திடீர் பிரச்சனையால் திணறிய 2 சீரியல் கேரக்டர்கள்!.. 3வது சீரியல் நாயகியின் மாஸ் எண்ட்ரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தீபக் மற்றும் நக்‌ஷத்திரா இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் இணைந்து, ஒருவாரத்துக்கு சங்கமமாக ஒளிபரப்பாகி வந்தது.

baakiyalakshmi entry thamizhum saraswathiyum pandian stores
Advertising
>
Advertising

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதையாக வரும் தமிழின் அம்மா தற்போது தான் தமிழின் தம்பிக்கு, சந்திரகலாவின் மகள் வசுவை திருமணம் செய்து வைத்தார். ஆனால் இந்த திருமணம் நடந்து முடிப்பதற்குள் பல அசம்பாவிதங்கள் நடந்ததால் பல விசேஷ நிகழ்ச்சிகளையும் ஹோமங்ளின் கோதை செய்து வந்தார்.

baakiyalakshmi entry thamizhum saraswathiyum pandian stores

இதன் ஒரு அங்கமாக தமிழின் அம்மா கோதை தன் வீட்டில் ஒருவாரம் தங்கி இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமான மூர்த்தி குடும்பத்தினருக்கும், தம்முடைய சம்மந்தியான சந்திரகலா குடும்பத்தினருக்கும், தம் தொழிலாளர்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்ய அந்த விருந்துக்கு சமையலையும் புக் செய்திருந்தார். ஆனால் சந்திரகலாவின் சூழ்ச்சியால் சமையல் நடக்காமல் போக, கோதை தவித்துவிட்டார்.

அப்போது என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் தவித்துக் கொண்டிருந்தபோது திடீரென என்ட்ரி கொடுத்திருக்கிறார் பாக்கியலட்சுமி. ஆம் கோதையின் இல்லத்துக்கு கேட்டரிங் செய்து கொடுக்க பாக்கியலட்சுமி சீரியலின் நாயகியான பாக்கியலட்சுமி அதிரடியாக என்ட்ரி கொடுத்தார்.

ஏற்கனவே தமிழும் சரஸ்வதியும் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய இரண்டு சீரியல்களும் சங்கமத்தில் இருக்கும்போது சர்ப்ரைஸாக மூன்றாவது சீரியலின் கதாபாத்திரம் உள்ளே வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதனிடையே தமிழுக்கு படித்த பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கோதை கூறிவந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமோ தமிழ் மற்றும் சரஸ்வதியின் காதலை தெரிந்து கொண்டு இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கியது.

ஆனால் கோதை மனதிலும் சரஸ்வதிதான் இருக்கிறார் என்பதையும், அதே சமயம் சரஸ்வதி படிக்கவில்லை என்பது கோதைக்கு தெரியாது என்பதையும் அறிந்துகொண்டு தமிழுக்கு ஆறுதல் சொல்ல்விட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் புறபட்டுவிட்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi entry thamizhum saraswathiyum pandian stores

People looking for online information on Baakiyalakshmi, Pandian stores, Thamizhum Saraswathiyum, Trending, Vijay Television, Vijaytv will find this news story useful.