பீட்டர் விட்ட ராதிகா.. தட்டுத் தடுமாறிய பாக்யா.. கடைசீல கொடுத்த மாஸ் பதிலடி.! BAAKIYALAKSHMI

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா வேலை செய்யும் ஆபீஸில் மேனேஜர் நம் ஆபீஸில் கேட்டரிங் ஆர்டரில் ஃபுட் பாய்சன் நடந்து 10 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர்.

Advertising
>
Advertising

Image Credit : vijay television

Also Read | இந்த படத்துக்கும் அருண் விஜய் நிஜ வாழ்வுக்கும் இவ்ளோ கனெக்ட் இருக்கா..? வைரல் Throwback ஃபோட்டோ..

அன்று அலுவலகத்துக்கு வந்த பாக்கியலட்சுமிக்கு கேட்டரிங் காண்ட்ராக்ட் கொடுத்திருக்கலாம். நீங்கள் சொன்னதால் நான் கொடுக்கவில்லை என ஆதங்கமாக பேசுகிறார். அப்போது ராதிகாவோ, அவங்க சமைத்தால் மட்டும் தப்பு வராதுனு என்ன சார் கேரண்டி என கேட்கிறார். அதற்கு அந்த மேனேஜரோ, பெண்கள் லாப நோக்கத்தில் வேலை செய்ய மாட்டார்கள். தாங்கள் சமைத்ததை அனைவரும் விரும்பி சாப்பிட்டு நல்லாருக்கு என சொல்வதையே முதன்மையாக கொண்டு பணிபுரிவார்கள் என்றார்.

Image Credit : vijay television

ஆனாலும் ராதிகா விடாப்பிடியாக ஏலம் விடலாம் சார், அதன் மூலம் நம்ம டீம் கிடைப்பார்கள். ஒரு தப்பான அனுபவத்தை வைத்துக்கொண்டு இந்த முடிவுக்கு வர வேண்டாம் என சொல்கிறார். இதை கேட்ட மேனேஜர், உங்களுக்கும் பாக்கியாவுக்கும் எதேனும் சண்டைடா? என வினவ, அதற்கு ராதிகா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்லிவிட்டு செல்கிறார். ஆனாலும் மேனேஜர் சந்தேகமாக பார்க்கிறார்.

Image Credit : vijay television

இதனை அடுத்து ராதிகா வேலை பார்க்கும் கம்பெனியில் சமையல் காண்ட்ராக்ட் ஏலம் விடப்படுகிறது. இங்கும் பாக்கியலட்சுமி வந்து கலந்து கொள்ள அவரை முதலில் எளப்பமாக ராதிகா நடத்துகிறார்.

Image Credit : vijay television

பின்னர் பாக்கியலட்சுமி அந்த கான்ட்ராக்ட்டை தன்னுடைய நேர்மையான பேச்சினாலும் குறைவான விலையில் தரமான உணவை தனது ஈஸ்வரி கேட்டரிங் காண்ட்ராக்ட் தர முடியும் என்று கொடுத்த நம்பிக்கையினாலும் அந்த காண்ட்ராக்டை பெறுகிறார். அதன் பிறகு பாக்கியலட்சுமியிடம் ஆங்கிலத்தில் கேள்விகளை கேட்டு திணறடிக்கிறார் ராதிகா.

Image Credit : vijay television

முதலில் தட்டு தடுமாறி ஆங்கிலத்தில் பதில் சொன்ன பாக்கியலட்சுமி பிறகு ராதிகாவிடம், “பிறக்கும் பொழுதே யாரும் எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்வதில்லை. தேவை என்று வரும்போதுதான் கற்றுக் கொள்கிறார்கள். படிப்புக்கும் நாகரீகத்திற்கும் சம்பந்தம் இருக்கு என்று சொல்கிறார்கள். ஆனால் சிலர் அப்படி நடந்து கொள்வதில்லை. அதுபோன்றுதான் இதுவும்” என்று பதிலடியாக பேசுகிறார்.

Image Credit : vijay television

இதனால் ராதிகாவின் முகம் கலவரம் ஆகிறது. இனி ராதிகா பாக்கியலட்சுமி இடையிலான சண்டை இந்த சீரியலை இன்னும் சுவாரசியமாக எடுத்துச் செல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Also Read | அடடே.. தாஜ்மஹால் முன் காதலர் தினத்தை கொண்டாடிய நம்ம ‘பொன்னியின் செல்வர்’.! trending ஃபோட்டோஸ்..

தொடர்புடைய இணைப்புகள்

Baakiya Radhika Conflict Baakiyalakshmi serial update

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial today, Baakiyalakshmi today episode will find this news story useful.