விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
Also Read | பிரபல பாலிவுட் நடிகையுடன் விக்கி - நயன்.. இணையத்தில் Trend ஆகும் ஃபோட்டோ!!
விஜய் டிவியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி. ஒரு இல்லத்தரசியின் கதை என்கிற ஒரு டேக் லைனுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் கோபியின் மனைவியாக வரும் பாக்கியலட்சுமி, தம்முடைய இரண்டு மகன்கள், ஒரு மகள், மருமகள், மாமனார், மாமியார் என அனைவரும் சேர்ந்த குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தார்.
இதனிடையே சொந்த காலில் நிற்க முயற்சித்த பாக்யா, தனியாக கேட்டரிங் சர்வீஸ் ஒன்றை தொடங்கி நடத்தி வைத்து வந்து கொண்டு இருந்தார். அவருக்கு ராதிகா என்பவருடன் அறிமுகம் ஏற்பட, இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
இன்னொருபுறம் மனைவி பாக்கியலட்சுமி மீது அன்பும் அக்கறையும் இழந்த கோபி, ராதிகா என்னும் பெண்ணின் மீது காதலில் விழுந்து கடைசியில் அவரை திருமணம் செய்யும் வரை சென்று விட்டார். ஏற்கனவே மணமாகி, கணவரை பிரிந்து ஒரு குழந்தையுடன் இருக்கும் ராதிகா, கோபியை பற்றி ஓரளவுக்கு அறிந்தவர் தான் என்றாலும் கோபியின் மனைவி தன்னுடைய தோழி பாக்கியலட்சுமி தான் என்பது அவருக்கு தெரியாது.
இப்படி இருக்க, ஒரு வழியாக பாக்யலட்சுமிக்கு ராதிகாவும் தன்னுடைய கணவரும் உறவில் இருக்கும் விவகாரம் தெரிய வந்துவிட்டது. அதற்கு காரணம் அண்மையில் கோபி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு மனைவி என்கிற பெயரில் மருத்துவமனையில் பில் கட்டிய நபர் ராதிகா என்கிற விஷயம் பாக்கியலட்சுமிக்கு தெரிய வந்தது தான்.
இதே போல் ராதிகாவுக்கும் கோபியின் மனைவி பாக்கியலட்சுமி தான் என்பது தெரிய வந்துவிட்டது. இதனால் கோபியை கடுமையாக திட்டி தீர்த்துவிட்டார். இந்த விஷயம் தெரிந்து வீட்டுக்கு வந்த பாக்கியலட்சுமி குடும்பத்தினர் அனைவரின் முன்னிலையிலும் வைத்து கோபியை உண்டு இல்லை என்று கேள்விகளை கேட்டு கொதித்து எழுந்து விட்டார். மேலும் பொறுமை இழந்த பாக்கியலட்சுமி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இனி அடுத்த கட்ட திருப்பங்கள் இந்த சீரியலில் பரபரப்பாக வரப்போகின்றன. இந்த ஒரு கட்டத்துக்காக தான் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். பாக்கியலட்சுமியின் இந்த எழுச்சி தான் இந்த கதையை இனி தாங்க போகிறது என்கிறனர் ரசிகர்கள்.
ஒரு சாமானிய பெண்ணின் அமைதியும், அதன் பிறகு அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு அவள் காட்டும் கோபமும், இதனை தொடர்ந்து புயலாய் மாறி அவள் எடுக்கும் விஸ்வரூபமும் என பாக்கியலட்சுமி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்வது இந்த சீரியலின் ரசிகர்களிடையே மிகவும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read | பிரபல நடிகர் வெளியிட்ட PONNIYIN SELVAN படத்தின் BTS போட்டோ.. வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு!