தமிழ் திரையுலகில் தற்போது மிக முக்கியமான இசை அமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத்.
2022 ஆம் ஆண்டில், அனிருத் இசையமைத்த 'பீஸ்ட்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'டான்', 'விக்ரம்' என அனைத்து படங்களின் பாட்லகளும் வேற லெவலில் ஹிட்டடித்திருந்தது.
தொட்டது எல்லாம் 'ஹிட்'
அதிலும் குறிப்பாக, பீஸ்ட் படத்தில் வரும் அரபிக்குத்து சர்வதேச அளவில் டிரெண்ட் ஆகி இருந்தது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் "Two Two Two" என்ற பாடல், டான் படத்தில் வரும் 'ஜலபுலஜங்கு' என்ற பாடல், விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல' மற்றும் பிஜிஎம் என அனிருத் தொட்டது எல்லாம் ஹிட் லிஸ்ட்டில் தான், அடுத்தடுத்து இடம்பெற்று வருகிறது.
எக்கச்சக்க திரைப்படங்கள்
இதனைத் தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் 'திருச்சிற்றம்பலம்', சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் 'ஜெயிலர்', விக்னேஷ் சிவன் அஜித் குமார் இணையும் 'AK62', அட்லி - ஷாருக்கான் ஹிந்தியில் இணைந்துள்ள 'ஜவான்' உள்ளிட்ட படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இதில், பல ஆண்டுகளுக்கு பிறகு, தனுஷுடன் அனிருத் இணைந்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி, வைரலாகி இருந்தது.
அனிருத்தை பாராட்டிய கீரவாணி
இந்நிலையில், பாகுபலி, RRR உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் கீரவாணி, அனிருத்தின் பாடல் குறித்து பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று, அதிகம் வைரலாகி வருகிறது.
தமிழில் MM கீரவாணி என்ற பெயரிலும், தெலுங்கில் எஸ்.எஸ். மரகதமணி என்ற பெயரிலும் இயங்கி வரும் இசையமைப்பாளரான இவர், தமிழில் அழகன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதே போல, சமீப காலமாக, பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் திரைப்படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராகவும் இவர் இருந்து வருகிறார்.
இதனிடையே, அனிருத் குறித்து கீரவாணி பகிர்ந்த ட்வீட்டில், "டான் படத்தில் வரும் BAE பாடல், Addict ஆகும் வகையில் உள்ளது. அனி எப்போதுமே புதுமை ஆனவர்" என தனது ட்வீட்டில் கீரவாணி குறிப்பிட்டுள்ளார்.
தனது பாடலை குறிப்பிட்டு, மிக பெரிய இசையமைப்பாளரான கீரவாணி போட்ட ட்வீட்டைக் கவனித்த அனிருத், "லவ் யூ சார்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவு, தற்போது நெட்டிசன்கள் அதிக கவனத்தை பெற்று வருகிறது. முன்னதாக, RRR படத்தின் தமிழில் வரும் 'நட்பு' என்ற பாடலை, கீரவாணி இசையில் அனிருத் பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.