எந்த மொழியைச் சேர்ந்த திரைப்படமாக இருந்தாலும் அவர்களுக்கு ஆஸ்கர் விருது வெல்வது மிகப் பெரிய கனவாக இருக்கும். 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் சிறந்த இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார். அந்த படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது வென்றார்.

இதனையடுத்து ஆஸ்கர் விருது பெறும் கனவு இந்தியர்களுக்கு இன்னும் நெருக்கமானது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் சிலர் ஆஸ்கருக்கு படங்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். பிரபல இயக்குநரான இவர், கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர், பாம்பே வெல்வட் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசர் ஸ்ரீநிவாஸ் மோகனும் அந்த குழுவில் முக்கியமான அங்கம் வகிக்கிறார். இவர் தான் பாகுபலி படத்துக்கும் விஷூவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.