"எனக்கு எதிரியா இருக்க உனக்கு தகுதி இல்ல".. இணையத்தை பத்த வெச்ச அசிமின் வார்த்தை!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்களின் அமோக வரவேற்புடன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் மிகவும் அசத்தலாக நடந்து முடிந்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இந்த நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் அதிகம் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் அனைத்து போட்டியாளர்களுமே தனித் திறனுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்த காரணத்தினால் அனைவருக்கும் ஏராளமான ரசிகர்களும் உருவாகி இருந்தனர்.

அதே போல தொடர்ந்து பிக் பாஸ் பிரபலங்கள் இன்டர்வியூ கொடுத்து வரும் சூழலில் அவர்கள் குறித்தும் ஏராளமான கருத்துக்களையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து தமிழ் பிக் பாஸ் குறித்த கருத்துக்கள் பெரிய அளவில் பேசுபொருளாகவும் சமூக வலைத்தளங்களில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னரான அசிம், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ட்வீட்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் டைட்டில் வின்னராக அசிம் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தனது பயணத்தின் அடுத்த மைல்கல்லாக திரைப்பட வாய்ப்புகள் பெறுவதிலும் பிசியாக இருந்து செயல்பட்டு வருகிறார். அப்படி இருக்கையில், ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளையும் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners

அதில், "ஒரு ஸ்டேட்மென்ட் சொல்வதற்கு முன்பாக அது யார் ஆரம்பித்து வைத்தார்கள் என பார்க்க வேண்டும். உங்களுக்கு விருப்பமான ஆட்கள் ஏதாவது செய்தால் அமைதியாக இருப்பீர்கள். ஆனால் அதுவே மாறி நடக்கும் போது இந்த மாதிரி நீங்கள் செய்கிறீர்கள். கொஞ்சமாச்சும் வளருங்கப்பா. பிக் பாஸ் தான் முடிஞ்சிருச்சு. நான் என்னோட ப்ராஜெக்ட்ல பிஸியா இருக்கேன். உங்க Fame-அ Defame பண்ணாம கரெக்டா பயன்படுத்தி Grow up பண்ணுங்க நண்பா" என ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Image Credit : Mohamed Azeem Twitter

அதேபோல மற்றொரு ட்வீட்டில், "சமயம் பார்த்து சாயம் பூசி சாதகமாய் சாயும் சகுனி அல்ல நான், ஏழை பணக்காரன் என பாகுபாடு இல்லாமல் ஒன்றுபோல் மேல் நோக்கி எரியும் தீபம். என்றும் என் பேச்சு ஒன்றுதான் ! "என் நண்பனாய் இருக்க தனி தகுதி தேவை இல்லை,என் எதிரியை இருக்க உனக்கொரு தகுதி இல்லை🔥" வளர்த்துக்கொள்ள வாழ்த்துகள் 😎" என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Image Credit : Mohamed Azeem Twitter

தொடர்புடைய இணைப்புகள்

Azeem tweets about comments on him in social media

People looking for online information on Azeem, Bigg boss will find this news story useful.