தன்னை நாமினேட் செய்த விக்ரமனிடம் நன்றி சொன்ன அசிம்.. நெகிழ்ச்சி பின்னணி!!.. BIGG BOSS!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | "வனிதா வந்தா நேரா அசிம்கிட்ட போய்".. ஜாலியா மைனா நந்தினி சொன்ன விஷயம் 😅.. ஹவுஸ்மேட்ஸ் கலகல

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். தொடர்ந்து, ஆறாவது பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷனும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.

இதில் "Nominated" என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒன்று இருக்க, அதனை தாங்கள் நாமினேட் செய்யும் போட்டியாளர் முகத்தில் ஒட்டி அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என தெரிகிறது. அப்போது, அசிம் மற்றும் கதிரவன் ஆகியோரை விக்ரமன் நாமினேட் செய்தார்.

இதனையடுத்து, அசிமை நாமினேட் செய்ததற்கான காரணம் பற்றி பேசிய விக்ரமன், "அசிம் மேல எனக்கு நிறைய அன்பும், மரியாதையும் வந்திருக்கு. சில வாரங்கள்ல அவரோட நடவடிக்கைகள், ரொம்ப அதீதமாக காயப்படுத்துற மாதிரியும், பிறரை வந்து இழிவுபடுத்துற மாதிரியும் இருந்துருக்கு. ஒரு Mixed ஆவே செயல்பட்டுருக்காரு.

மத்தபடி அவரோட கேம் பிளே, அவருடைய பலப்பரீட்சை இது எல்லாமே சிறப்பாக அவர் செஞ்சு இருக்காரு. அதுனால தான் 94 ஆவது நாள் அவரு அடி எடுத்து வெச்சுருக்காரு. நமக்கு கொடுக்க கூடிய சூழ்நிலைகளை எப்படி கையாளுறோம் அப்படிங்குறது ரொம்ப முக்கியமா படுது. தனக்காக குரல் கொடுக்குறதாகட்டும், பிறருக்காக பேசுவதாகட்டும் அதில் எல்லாம் எந்த ஒரு குறைச்சலும் இல்லாத நபர் அசிம். ஆனா அத பண்ணும்போது வரக்கூடிய விஷயங்கள், அது மத்தவங்கள கடுமையா பாதிச்சுடுது. அது மத்தவங்களோட கேம பாதிக்குற மாதிரியும் இருக்குது.

அதை அவர் அறிஞ்சு பண்ணுறாரா இல்ல தெரியாம பண்றாராங்குற விடை இன்னும் எனக்கு தெரியல. ஆனா அவரு இறங்கிப்போன இடங்கள்ல அந்த மாதிரி விஷயம் நடந்திருக்கு. அத அவர் தவிர்த்திருந்தா இந்நேரம் இந்த மாதிரியான ஒரு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்க மாட்டார். அதை அவர் தவிர்க்காத பட்சத்தில் அவரை நாமினேஷன் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்" என கூறினார்.

நாமினேட் செய்த பின் விக்ரமன் சென்று அமர்ந்ததும் அவரிடம் பேசிய அசிம், "நன்றி விக்ரமன். நிறைகளை பேசிட்டு குறைகளையும் சொன்னீங்க" என மனம் நெகிழ்ந்து போய் குறிப்பிட்டார்.

Also Read | "வனிதா அக்காவுக்காக Waiting, அவங்க பேசுறப்போ Counter குடுக்கணும்".. அசிம் சொன்னதும் பதறிய அமுது

தொடர்புடைய இணைப்புகள்

Azeem thanks vikraman after he nominate him bigg boss house

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.